உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பணநாயகத்திற்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்: அண்ணாமலை பேட்டி

பணநாயகத்திற்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்: அண்ணாமலை பேட்டி

கோவை: 'பணநாயகத்திற்கு கோவை மக்கள் முடிவு கட்டுவார்கள்' என தமிழக பா.ஜ., தலைவரும், கோவை தொகுதி பா.ஜ., வேட்பாளருமான அண்ணாமலை நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=81srujq5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கரூர் மாவட்டம் ஊத்துப்பட்டி அரசு துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடியில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஓட்டளித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:கோவை தொகுதியில் பா.ஜ., ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை. அப்படி நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயாராக இருக்கிறேன். நல்லவர்கள் நம்மை ஆள வேண்டும்.

ஜனநாயகத்தின் வலிமை

ஆள்பவர்களோடு தொப்புள்கொடி உறவு நீடிக்க ஓட்டளிக்க வேண்டும். பணநாயகத்திற்கு கோவை மக்கள் முடிவு கட்டுவார்கள். ஜனநாயகத்தின் வலிமை என்பது வாக்காளர்கள் தான். எங்கு இருந்தாலும் மாலை 6 மணிக்குள் ஓட்டளித்து நல்லவர்களை தேர்ந்தெடுங்கள்.

ஜூன் 4ம் தேதி நல்ல முடிவு

கேள்வியாகவும், தவமாகவும், வெளிப்படையாகவும் லோக்சபா தேர்தலை எதிர்கொண்டிருக்கிறோம். தேர்தல் திருவிழா நாளில் அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். திராவிட கட்சிகள் பணம் கொடுத்து ஓட்டுகள் பெறுவதற்கு இந்த லோக்சபா தேர்தலில் முடிவு கட்டப்படும். மாற்றம் ஏற்பட ஓட்டளிக்க வேண்டும். ஜூன் 4ம் தேதி நல்ல முடிவு கிடைக்கும். 39 தொகுதிகளும் வெல்வோம்.

கோவை மாடல்

எப்போதும் பெரிய கவலைதான். காரணம், கொங்கு மண்டலத்தில் எப்படியாவது மக்களை விலைக்கு வாங்கலாம் என்று திமுக நினைப்பதுதான். ஜூன் 4ம் தேதி வெளிவரவிருக்கும் கோவை மாடல் நாடு முழுவதும் ஒரு முன் மாதிரியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஓட்டு சாவடிகளில் அண்ணாமலை ஆய்வு

ஓட்டளித்து விட்டு, கரூரில் இருந்து கோவைக்கு வந்த அண்ணாமலை சூலூரில் மூன்று ஓட்டு சாவடிகளில் ஆய்வு செய்தார். ஓட்டு சதவீதம் குறித்து அதிகாரிகள், கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். அப்போது, ஒருபெண் 30 ஆண்டுகளாக ஓட்டளிக்கிறேன். இந்த முறை பட்டியலில் போட்டோ மாறியுள்ளதாக கூறி ஓட்டளிக்க வாய்ப்பு அளிக்க மறுத்துவிட்டனர் என, புகார் தெரிவித்தார். இது குறித்து விசாரிப்பதாக அண்ணாமலை அப்பெண்ணிடம் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 53 )

Kanagaraj M
ஏப் 22, 2024 16:20

கோவை -இல் யாரோ ஒரு கட்சிக்காரர் நிர்வாகி காசை கீழே போட்டு விட்டு ஓடியதாக காணொளியை நான் பார்த்தேன்


Rahulakumar Subramaniam
ஏப் 21, 2024 18:21

நீங்கள் சொல்வது உண்மை ஐயா


KUPPUSAMY
ஏப் 20, 2024 17:20

உங்களது பேச்சு தொடர்ந்து கேக்க நல்லா இருக்கு, ஆனால் ஓட்டு போட மனசு வரலை அடுத்த தேர்தல்ல பார்க்கலாம்


venugopal s
ஏப் 20, 2024 11:46

தேர்தல் பத்திரங்கள் மூலம் வசூலித்த பணநாயகத்தைப் பற்றித் தானே சொல்கிறீர்கள் அண்ணாமலை அவர்களே!


rama adhavan
ஏப் 21, 2024 05:13

அப்போ காங்கிரஸ் திமுக வசூல் செய்தவை எந்தக் கணக்கு?


Srivatsan
ஏப் 19, 2024 23:38

அண்ணாமலை நாக்கில் விஷம் கலந்து தேன் போல பேசுபவர்


venugopal s
ஏப் 19, 2024 22:46

அண்ணாமலை தமிழகத்தில் முப்பத்தொன்பது பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பது மூடநம்பிக்கையின் உச்சம்!


மொட்டை தாசன்...
ஏப் 19, 2024 15:59

வெற்றி பெற வாழ்த்துக்கள்


Govind Srinivasan
ஏப் 19, 2024 14:37

ஆம், நீட் கொண்டு வந்த காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்


N. Srinivasan
ஏப் 19, 2024 14:28

எனக்கு ஒன்று புரிய வில்லை எந்த ஒரு பி ஜே பி உறுப்பினரும் சிறுபான்மையர் மதத்தை இழிவு படுத்துவதில்லை இந்து மதம் பற்றித்தான் பேசுகிறார்கள் அப்படி இருக்க எப்படி இந்த நாட்டில் சிறு பான்மை மக்கள் அவதிப்படுகிறார்கள் என்ற எண்ணம் மக்களுக்கு இந்தியா முதலில் ஒரு இந்து நாடு என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்


kingslin J
ஏப் 20, 2024 09:15

இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு


Kandasamy
ஏப் 19, 2024 14:19

ஜெய் ஸ்ரீராம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை