உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 மாடி வரை கட்டடம் கட்ட சுயசான்று முறையில் இன்று முதல் அனுமதி

2 மாடி வரை கட்டடம் கட்ட சுயசான்று முறையில் இன்று முதல் அனுமதி

சென்னை : சுயசான்று முறையில், இரண்டு மாடி வரை கட்டடம் கட்டுவதற்கான அனுமதி பெற, 'ஆன்லைன்' முறையில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக, நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தமிழகத்தில், 2,500 சதுர அடி வரையிலான நிலத்தில், 3,500 சதுர அடி பரப்பளவுக்கு வீடு கட்ட, சுயசான்று முறையில் விண்ணப்பிக்கும் திட்டம், கடந்த ஆண்டு ஜூலையில் துவங்கப்பட்டது. இதன்படி, தரைதளம், முதல் தளம் வரை, 22 அடி உயரத்துக்கு கட்டடம் கட்ட அனுமதிக்கப்பட்டது. இத்திட்டத்தில் தேவையான ஆவணங்களை, இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்து கட்டணம் செலுத்தினால், உடனடியாக ஒப்புதல் வழங்கப்படும். தற்போது வரை, இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அனுமதி பெற்றுள்ளனர். இந்நிலையில், மக்களின் கோரிக்கை அடிப்படையில் சுயசான்று முறையில், 3,500 சதுர அடி பரப்பளவுக்கான கட்டடத்தை, அடித்தளம், தரைதளம் மற்றும் இரண்டு தளங்கள் என கட்ட, அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக கட்டடத்தின் உயர வரம்பு, 32 அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை, கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதன்படி, இரண்டு மாடி வரையிலான கட்டடங்களுக்கு, மக்கள் இன்று முதல் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் இதற்கான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ