உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  டெட் தேர்வில் விலக்கு கோரி பள்ளிக்கல்வி அமைச்சரிடம் மாற்றுத்திறனாளிகள் மனு

 டெட் தேர்வில் விலக்கு கோரி பள்ளிக்கல்வி அமைச்சரிடம் மாற்றுத்திறனாளிகள் மனு

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வான, 'டெட்' எழுதுவதில் இருந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷிடம் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு அளித்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வி துறையில், ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த செப்., 1ம் தேதி 'டெட்' தேர்வு தொடர்பாக, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 'மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் பிரிவு, 41ன் படி, மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள், தகுதித் தேர்வு எழுதுவதில் இருந்து, கொள்கை முடிவின் அடிப்படையில், மாநில அரசுகள் விலக்கு அளிக்கலாம்' என, தெரிவித்துள்ளது. இதைச் சுட்டிக்காட்டி, கடந்த செப்டம்பரில், பள்ளிக்கல்வித் துறை செயலருக்கு கடிதம் எழுதினோம். இதற்கு அவரிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. கடந்த மாதம், 10ம் தேதி, பள்ளிக்கல்வித் துறை செயலரை நேரில் சந்தித்து மனு அளித்தோம். அரசு எங்கள் கடிதத்தை பரிசீலனை செய்யவில்லை. கடந்த மாதம் 19ல், 'டெட்' தேர்வு எழுதுவதில், எங்களுக்கு விலக்கு அளிப்பது மற்றும் மதிப்பெண் தளர்வு வழங்குவது குறித்த, நீதிமன்ற தீர்ப்பை கடைப்பிடிக்காமல், அறிக்கை வெளியிட்டு இருப்பது வேதனையாக உள்ளது. கர்நாடகா, கேரளா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு மற்றும் மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்ற தீர்ப்பை கருத்தில் வைத்து, மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள், தகுதி தேர்வு எழுதுவதில் இருந்து, முற்றிலும் விலக்கு அளித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை