உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெட்ரோல், டீசல் விலையில் 100வது நாளாக மாற்றம் இல்லை

பெட்ரோல், டீசல் விலையில் 100வது நாளாக மாற்றம் இல்லை

சென்னை: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை, இன்று(ஜூன் 24) 100வது நாளாக மாற்றமின்றி, ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. தமிழகத்தில், 2021 நவ.,3ல் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 102.59 ரூபாய்க்கு விற்பனையாகின. இதுவே, பெட்ரோல், டீசல் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது.கடந்த 2022ம் ஆண்டு மே-21-ம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீர் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார் அதனை தொடர்ந்து சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது.

இந்நிலையில், தொடர்ந்து 100வது நாளாக சென்னையில் இன்று(ஜூன் 24) பெட்ரோல் ஒரு லிட்டர் 100.75 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 92.34 ரூபாயாக்கும் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sampath Kumar
ஜூன் 24, 2024 11:35

கொஞ்சம் பொறுங்க இந்த இரணுமே ஒழியப்போகுது ஜப்பான் காரன் தண்ணீரில் ஓடும் காரை கண்டுபிடித்து விட்டான் டொயோட்டா நிறுவனம் சாதனை படைத்தது உள்ளது இந்த செய்தி ஆயில் உற்பத்தி பண்ணும் நாடுகளுக்கு பேரிடியாக வந்து உள்ளது இனி தண்ணீர்க்கு அடித்தது யோகம்


Venkatesan
ஜூன் 24, 2024 12:31

இப்புடி காலாவதியான மருந்தை குடிச்சிட்டு கருத்து எழுதக்கூடாது. நீங்கள் கூறுவது ஹைட்ரஜன் வகை வாகனம். அது இன்னும் மாதிரி வடிவில் தான் உள்ளது. அதை சந்தை படுத்துவது அவ்வளவு சுலபம் இல்லை.


ஆரூர் ரங்
ஜூன் 24, 2024 10:06

ஏராள அன்னியச் செலாவணியை கொடுத்து இறக்குமதி செய்யும் பெட்ரோலை சிக்கனமாக செலவு செய்யாமல் பொழுதுபோக்கு உல்லாசம் போன்றவற்றுக்கு செலவழித்துவிட்டு பிறகு அதனை குறைந்த விலைக்குக் கேட்பது எப்படிப்பட்ட கோரிக்கை?


GMM
ஜூன் 24, 2024 08:03

எரி பொருள் அந்நிய செலாவணி மூலம் இறக்குமதி. வாகனங்கள் மாநிலம் விட்டு மாநிலம் அதிகம் இயக்க படுகின்றன. பெட்ரோல் பங்க் மத்திய அரசு பராமரிக்கிறது. இதனை gst குள் கொண்டுவர வேண்டும். Tax வரி என்பது தன் வருவாயில் இருந்து பொது உபயோகத்திற்கு கட்டுவது. பிறர் உழைப்பை பயன் படுத்த goode service Fee கட்டணம் என்று இருக்க வேண்டும். gst சீர்திருத்தம் தேவை.


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ