UPDATED : மார் 03, 2024 10:29 AM | ADDED : மார் 03, 2024 04:50 AM
தமிழகத்தில் அங்கீகாரமில்லாத மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டம், 2017ல் அறிவிக்கப்பட்டது. இதில், 2019 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த காலகெடுவில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதன் அடிப்படையில், அங்கீகாரமில்லாத மனை உரிமையாளர்கள் விண்ணப்பிக்க, ஆறு மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. இதற்கான உத்தரவு, 2023 செப்., 4ல் வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில், மனை உரிமையாளர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். இதுகுறித்து நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் சென்னை பெருநகர் பகுதிக்கு வெளியில், இந்த சிறப்பு வாய்ப்பை பயன்படுத்தி, 2.40 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். மனைப்பிரிவு தொடர்பாக, 10,589; தனி மனைகள் தொடர்பாக, 1,71,811; தனி மனையில் உட்பிரிவு தொடர்பாக, 58,491 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் விண்ணப்ப பதிவு உள்ளிட்ட வகைகளில், இதுவரை, 19.15 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -