உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல் எடையில் கொள்ளை லாபம்; டெல்டா விவசாயிகள் வேதனை

நெல் எடையில் கொள்ளை லாபம்; டெல்டா விவசாயிகள் வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர் : காவிரி டெல்டா மாவட்டங்களில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல்லை விற்பனை செய்ய விவசாயிகளிடம் இருந்து ஒரு மூட்டைக்கு சுமார் 40 முதல் 50 ரூபாய் கறார் வசூல் நடந்து வருகிறது.தற்போது, மாமூலை விட எடையில் பணியாளர்கள் கொள்ளை லாபம் பார்த்து வருவதால், விவசாயிகள் அதிருப்தியடைந்து வருகின்றனர்.நசுவினி ஆறு படுக்கை அணை, விவசாயிகள் மேம்பாட்டு சங்கத் தலைவர் வீரசேனன் கூறியதாவது:கொள்முதல் நிலையத்தில், சுமை துாக்கும் பணியாளர்கள் சம்பள பிரச்னையால் தான் மூட்டை எடையில் கை வைத்தனர். ஆனால், மூட்டைக்கு 10 ரூபாய் சம்பளம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நெல் மூட்டை எடையில் கூடுதலாக வைத்து, அதில் லாபம் பார்ப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது.ஒரு மூட்டை 40 கிலோவுடன் 750 கிராம் சாக்கு எடையை சேர்ந்து, 40 கிலோ 750 கிராம் கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால், 42.5 கிலோ வரை கொள்முதல் செய்கின்றனர்.உதாரணமாக ஒரு விவசாயி 400 மூட்டை நெல் விற்பனை செய்தால், மூட்டைக்கு, 1.5 கிலோ வீதம், 600 கிலோ எடையில் மோசடி செய்கின்றனர். அப்படி என்றால், விவசாயிக்கு குறைந்தபட்சம் 15 மூட்டை வீதம், 15,000 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.இதுபோக, தனியாக மாமூல் வழங்க வேண்டியுள்ளது. இதற்கு அரசு என்ன பதில் சொல்ல போகிறது. விவசாயிகளுக்கு தீர்வு எப்போது கிடைக்கும் என தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

இருவர் சஸ்பெண்ட்

தஞ்சாவூர் மாவட்டம், பஞ்சநதிக்கோட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கலெக்டர் தீபக் ஜேக்கப், சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தார். அப்போது, கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளை மறு எடையிட்டு பார்க்கப்பட்டதில், நிர்ணயிக்கப்பட்ட எடையளவை விட கூடுதலாக இருந்ததால், பட்டியல் எழுத்தர் மற்றும் உதவுபவர் இருவரையும் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார். இதை கண்காணிக்க தவறிய கொள்முதல் அலுவலரையும் அந்த பொறுப்பிலிருந்து விடுவித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

J.V. Iyer
பிப் 18, 2024 19:17

எல்லாம் நீங்கள் வோட்டு போட்டு தேர்ந்தெடுத்த மாடல் அரசுதான். இதில் டெல்டாவில் திராவிஷ கழகத்தை அசைக்கமுடியாதாம். நீங்கள்தானே காரணம்? இந்தமுறையாவது பாஜகவுக்கு வோட்டு போட்டு என்ன செய்கிறது என்று பாருங்கள்.


Kannan
பிப் 18, 2024 18:06

எடை மேசினிகள் கம்ப்யூட்டரிஸ்ட் செய்யப்பட்டு பேங்க் அகவுண்டில் விவசாயிகளுக்கு பணம் செலுத்த பட வேண்டும். அப்போதுதான் விவசாயிகளுக்கு முழு பலன் அடைவர்


sridhar
பிப் 18, 2024 13:32

எல்லா தரப்பு மக்களும் திமுக மேல் கடும் அதிருப்தியில் இருக்கும்போது கருத்து கணிப்பில் மட்டும் திமுக எப்படி ஜெயிக்குது.


duruvasar
பிப் 18, 2024 12:56

அந்த டெல்டா காரனுக்கு தகவல் சொல்லுங்கள். அவர் சாட்டையை எடுக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்துங்கள்.


Kasimani Baskaran
பிப் 18, 2024 09:49

'மூட்டைக்கு பத்து' பத்து ரூபாய் என்கிற தரித்திரம் பிடித்த தொழில் நுணுக்கம் எங்கும் புகுந்து விளையாடுகிறது. விவசாயிகளின் நலனில் மாநில மாடல் அரசு அக்கரை கொண்டுள்ளது என்று உருட்டும் உபிஸ் பக்கிகள் எங்கிருந்தாலும் ஓடி வந்து முட்டுக்கொடுக்க முயற்சிக்கவும்.


raja
பிப் 18, 2024 09:01

கொள்ளை காரணை ஆட்சியிலமர்தினால் கொள்ளை அடிக்காமல் என்ன பண்ணுவாங்க....


Amar Akbar Antony
பிப் 18, 2024 08:22

அரசன் எவ்வழி அவ்வழி அவரது ஊழியர்கள்.


ngopalsami
பிப் 18, 2024 08:01

சரக்கு பாட்டில் கொள்ளை, இப்போது விவசாயிகள் வேர்வை சிந்தி உழைத்து அறுவடை செய்த நெல் மூட்டைகளில் கைவைத்திருக்கிறார்கள்.


rama adhavan
பிப் 18, 2024 07:48

நீதிமன்றம் போகட்டும். நியாயம் கிடைக்கும்.


raman
பிப் 18, 2024 07:47

அரசு செய்யும் நெல்கொள்முதலில் இவ்வளவு அநியாயங்கள் இருக்கும் பொது விவசாஈகள் அரசு கொள்முதல் நிலையங்களை தவிர்க்கலாமே தனியாரிடம் விற்கலாமே அல்லது தாங்களே கூட்டுறவு முறையில் நெல்லை சேமித்து உரிய விலைக்கு விற்று பிரித்து கொள்ளலாமே


மேலும் செய்திகள்







புதிய வீடியோ