| ADDED : நவ 22, 2025 05:09 PM
சென்னை: சாகித்ய அகாதமி விருதுபெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன்,92, உடல்நலக்குறைவால் காலமானார்.எழுத்தாளரும், தமிழ் கவிஞருமான தமிழன்பன், 'வணக்கம் வள்ளுவ' நூலுக்காக 200ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார். மரபுக்கவிதை, புதுக்கவிதை, நாடகங்கள், குழந்தைகள் இலக்கியம் ஆகிய பல்வேறு படைப்புகளை எழுதியுள்ளார். பாரதிதாசன் மரபைச் சேர்ந்த தமிழன்பன், வானம்பாடி கவிதை இயக்கத்தின் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவர். சினிமா துறை, செய்தித்துறைகளிலும் அனுபவம் பெற்றவர். தமிழக அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினர் மற்றும் அரிமா நோக்கு என்ற ஆய்விதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில், வயது மூப்பு காரணமாக ஈரோடு தமிழன்பன்,92, இன்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்; மரபுக்கவிதை, புதுக்கவிதை என இரண்டிலும் சிறந்து, தமிழுக்கு வளம் சேர்த்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்கிற ந. செகதீசன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். இறுதிக்காலம் வரையிலும் பல வகைமைகளிலும் தமிழுக்குத் தொண்டாற்றிய நீண்ட நெடிய பெருவாழ்வுக்கு சொந்தக்காரரான கவிஞர் ஈரோடு தமிழன்பனை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், தமிழன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல், இவ்வா கூறியுள்ளார்.