உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரவுடிகளை பிடிக்க சென்ற போலீஸ்காரருக்கு தர்மஅடி காலில் கடித்து, போனை பறித்து துரத்தினர்

ரவுடிகளை பிடிக்க சென்ற போலீஸ்காரருக்கு தர்மஅடி காலில் கடித்து, போனை பறித்து துரத்தினர்

பெரியகுளம்: பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட ரவுடிகளை பிடிக்க சென்ற போலீஸ்காரரை சரமாரியாக தாக்கி, காலில் கடித்து, அவரது போனை பறித்து துரத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி முனீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் யுவன்சங்கர். இவரது நண்பர்கள் வானவராயன், சூரியபிரகாஷ், தினேஷ், சரவணன், கோபாலகிருஷ்ணன் மற்றும் இருவர். ரவுடிகளான இவர்கள் மீது தென்கரை போலீஸ் ஸ்டேஷனில் அடிதடி வழக்கு நிலுவையில் உள்ளதால், நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. அவர்களை பிடிக்க தென்கரை தனிப்படை போலீஸ் ஏட்டு சரவணன், 48, சிறப்பு எஸ்.ஐ., திருப்பதிராஜா, 50, வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க தனித்தனி டூ வீலரில் சென்றனர். தேனி பைபாஸ் ரோடு சருத்துப்பட்டி பிரிவு, திருமணம் மண்டபம் அருகே யுவன்சங்கர் ராஜா உட்பட அனைவரும் மது குடித்து நடனம் ஆடியபடி போதையில் இருந்தனர். ஏட்டு சரவணன், 'ஏன் இப்படி பைபாஸ் ரோட்டில் மது குடிக்கிறீர்கள்?' என கேட்டு, பிடிவாரன்ட் குறித்து தெரிவித்தார். யுவன்சங்கர் உள்ளிட்ட ஆறு பேரும் சரவணனை அவதுாறாக பேசினர். அவர்கள் செயலை சரவணன் மொபைல் போனில் வீடியோ எடுத்தார். இதில், ஆத்திரமடைந்தவர்கள், சரவணனை சரமாரியாக தாக்கினர். இதில் ஒருவர், சரவணனின் இடது காலை கடித்துள்ளார். கத்தியை காட்டி மிரட்டி, சரவணன் வீடியோ எடுத்த மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றை பறித்தனர். 'இனி எங்க ஏரியாவுக்குள் வந்தால் கொல்லாமல் விடமாட்டோம்' என, மிரட்டி உள்ளனர். தகவலறிந்த தென்கரை போலீசார் சரவணனை மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். போலீசார் யுவன்சங்கரை கைது செய்து, தப்பிய மற்றவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

N Sasikumar Yadhav
அக் 28, 2025 12:04

திராவிடமென்றால் இதுதான்


Ramesh Sargam
அக் 28, 2025 07:22

இப்படிப்பட்ட குற்றவாளிகளுக்கு உத்திரபிரதேச முதல்வர் யோகி கொடுக்கும் தண்டனைதான் மிகவும் பொருத்தமாக இருக்கும். ஆம், ஓடவிடு, சுட்டுத்தள்ளு.


பிரேம்ஜி
அக் 28, 2025 07:15

போலீஸ் ரவுடிகளால் தாக்கப் படுவது சரியல்ல! தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை