உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  20 லட்சம் வாக்காளரை தேடும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள்

 20 லட்சம் வாக்காளரை தேடும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள்

சென்னை: தமிழகத்தில், 20 லட்சம் வாக்காளர்களுக்கு, கணக்கெடுப்பு படிவங்களை வழங்க முடியாமல், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் திணறி வருகின்றனர். தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை, இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. டிசம்பர் 4ம் தேதி வரை, இப்பணி நடக்க உள்ளது. தமிழகத்தில், 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வினியோகம் செய்யும் பணியில், 68,470 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை, 6.19 கோடி வாக்காளர்களுக்கு படிவம் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. பூர்த்தி செய்யப்பட்டு, திரும்ப பெறப்பட்ட 3.76 கோடி படிவங்கள், 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. மற்ற மாநிலங்களில் கணக்கெடுப்பு படிவம் வினியோகம் செய்யும் பணிகள், 99 சதவீதத்திற்கு மேல் நிறைவு பெற்றுள்ளன. தமிழகத்தில், 96.6 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. இன்னும், 21.4 லட்சம் வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வினியோகம் செய்ய வேண்டியுள்ளது. இதில், 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் முகவரி மாறியதால், அவர்களை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒன்பது நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளது. இதனால், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் திணறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை