உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை ஓட்டுப்பதிவு: 1.90 லட்சம் போலீஸ் பாதுகாப்பு

நாளை ஓட்டுப்பதிவு: 1.90 லட்சம் போலீஸ் பாதுகாப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6:00 மணியுடன் ஓய்ந்தது. நாளை(ஏப்.,19) ஓட்டுப்பதிவு நடக்க உள்ள நிலையில், மாநிலம் முழுதும், 1.90 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு லோக்சபா தொகுதிக்கும், தமிழகத்தின் விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் நாளை ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. தமிழகத்தில் 950 வேட்பாளர்களும், புதுச்சேரியில் 26 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.கடந்த ஒரு மாதமாக, ஒவ்வொரு வேட்பாளரும், கட்சித் தலைவர்களும், பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, மக்களிடம் ஓட்டு கேட்டனர். நேற்று அனைவரும் காலை முதல் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 6:00 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது.ஓட்டுப்பதிவு நாளை நடப்பதையொட்டி, ஓட்டுச்சாவடிகள் முழுதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு பணியில், 1.90 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களில், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த, 10,000 போலீசார் உள்ளனர்.அவர்களுடன், துணை ராணுவ படையினர், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் ஊர் காவல் படையினரும் உள்ளனர். வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளிக்க கொடி அணிவகுப்பும் நடத்தினர். தொகுதிகளுக்கு தொடர்பு இல்லாத நபர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை