உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமர் மோடி இன்று கோவை வருகை: பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் மாநகரம்

பிரதமர் மோடி இன்று கோவை வருகை: பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் மாநகரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: பிரதமர் மோடியின் வருகையையொட்டி, கோவை மாநகரம் முழுதும் தேசிய பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுஉள்ளது.தேர்தல் பிரசாரத்துக்காக கோவை வரும் பிரதமர் மோடி, இன்று மாலை 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்களை சந்திக்க உள்ளார். இந்த, 'ரோடு ஷோ' சாய்பாபா கோவில் அருகே துவங்கி, வடகோவை, டி.பி.ரோடு வழியாக ஆர்.எஸ்.புரம் வரை, 2 கி.மீ., துாரம் நடைபெறுகிறது. இதற்காக பிரதமர் மோடி, கர்நாடக மாநிலம் ஷிமோகா விமான நிலையத்தில் இருந்து, கோவைக்கு இன்று மாலை, 5:30 மணிக்கு வருகிறார்.விமான நிலையத்திலிருந்து குண்டு துளைக்காத காரில், 'ரோடு ஷோ' துவங்கும் பகுதியை அடைகிறார். அங்கு மாலை, 5:45 மணிக்கு 'ரோடு ஷோ' நிகழ்ச்சி துவங்கி மாலை, 6:45 மணிக்கு நிறைவடைகிறது.அதன்பின், இரவு, 7:05 மணிக்கு, ரேஸ்கோர்சில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்கிறார். நாளை காலை, 9:30க்கு கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கேரள மாநிலம் பாலக்காடு புறப்பட்டு செல்கிறார்.பிரதமர் மோடி கோவை வருகையையொட்டி, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில், 5,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுஉள்ளனர். முக்கிய இடங்களில் கூடுதல் 'சிசிடிவி' கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். வாகன சோதனையும் மேற்கொண்டு வருகின்றனர்.'ரோடு ஷோ' நிகழ்ச்சி நடைபெறும் பகுதி முழுதும், தேசிய பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. பிரதமரின் தனிப்பிரிவு பாதுகாப்பு படை ஐ.ஜி., லவ்குமார் தலைமையில் அதிகாரிகள், அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்து வருகின்றனர். ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.பிரதமர் மோடியின் கான்வாயில், போலீசார் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் ஒத்திகை மேற்கொண்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமர் வந்து செல்ல, மாற்றுப்பாதைகளையும் போலீசார் தயார் செய்து வைத்துள்ளனர்.'ரோடு ஷோ' நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளை கண்காணிக்க, உயரமான கட்டடங்களையும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தேர்வு செய்து வைத்துள்ளனர்.பிரதமரின் கான்வாய் செல்வதற்கு, மூன்று மணி நேரத்திற்கு முன் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்படும் என, மாநகர போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Rengaraj
மார் 18, 2024 16:48

பிரதமர் என்றாலும் அவரும் கட்சித்தலைவர் தான். பிரச்சாரத்துக்கு போகக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. பிரதமர் பதவி என்று இருப்பதால் தான் இத்தனை பாதுகாப்பு. அவரே வேண்டாம் என்றாலும் அந்த பதவிக்கு என்று ஒரு ப்ரோடோகால் இருக்கிறது. சட்டரீதியாக தந்துதான் ஆகவேண்டும். சாதாரணமாக பிரதமரை யாரும் நேரில் சென்று பார்த்துவிடமுடியாது என்பதால் அவரே வருகிறார். பிடிக்கிறதோ இல்லையோ அந்த பதவிக்காக நாம் பொறுத்துக் கொண்டு தான் ஆக வேண்டும். அவர் வர வேண்டாம் , போக்குவரத்து பாதிக்கிறது என்றால் மற்ற கட்சிக்காரர்களும் இங்கே பிரச்சாரத்துக்கு வர வேண்டாமே எல்லாரும் சோசியல் மீடியா, யு டியூப், டெலெக்ராம், டிவி. இப்படி பிரச்சாரம் பண்ணட்டும். ரோட்டில் யாருமே வரக்கூடாது. அதற்கு சட்டத்தில் இடம் இருக்கா ?


Anantharaman Srinivasan
மார் 18, 2024 14:58

மக்கள் வாகனபோக்கு வரத்துக்கு தடைசெய்து, அதிகப்படியான அரசாங்க செலவில் ரோடு ஷோ வுக்கு என்ன அவசியம் வேண்டிக் கிடக்கிறது. ?? மக்கள் மனதை உண்மையிலேயே மோடி கவர்ந்திருந்தால் தானே ஓட்டு விழுமே.


Ramanujadasan
மார் 18, 2024 16:37

உங்களுக்கு குழந்தைகள் உண்டு என நினைக்கிறேன் . அவர்கள் அறிவாளிகள் என்றாலும் அவர்களை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைப்பது எதற்கு ? அவர்கள் தான் அறிவாளிகள் ஆயிற்றே அவர்களே படித்து கொள்ளட்டும் என நினைத்து விட்டு விடுவீர்களா ? அதை போல இந்த இப்போதைய உலகத்தில் யார் எதை செய்தாலும் அதை மக்களுக்கு தெரிய படுத்துவது நம் கடமை .


T.sthivinayagam
மார் 18, 2024 14:02

நாட்டின் வளர்ச்சி என்று சொல்லி சொல்லி கட்சி வளர்ச்சியை காட்டிவிட்டார்களே ராம என்று மக்கள் வேதனைபடுகிறார்கள்


Nalla
மார் 18, 2024 13:21

நிருபர்களிடம் பேசிய செல்வபெருந்தகை, 'இண்டியா கூட்டணி 400 தொகுதிகளை கைப்பற்றும்' எனத் தெரிவித்தார் .


T.sthivinayagam
மார் 18, 2024 12:41

தேர்தல் பத்திர பணம் எவ்வாறு செலவு ஆகிறது என்பதற்கு இந்த ரோடு ஷோ உதாரணம் என்று மக்கள் கூறுகின்றனர்


வல்லரசு
மார் 18, 2024 11:36

அவர் நல்லாட்சி செய்திருந்தால் ரோடுக்கு வரவேண்டிய அவசியமேயில்லை. மக்கள் அவர் கேட்காமலேயே ஓட்டுப் போடுவார்கள்.


செந்தமிழ் கார்த்திக்
மார் 18, 2024 11:35

நடப்பது நாடாள மன்ற தேர்தல். அதாவது பிரதமர் பதவிக்கான தேர்தல். தேர்தல் தேதி அறிவிக்க பட்ட பிறகு, தனது சொந்த கட்சி கூட்டத்திற்கு பிரதமர் ஏன் அரசு பணத்தில் குதூகலிக்க வேண்டும்? அவரது கட்சி பணத்தில் சொல்லட்டுமே. மக்களின் வரிப்பணத்தை எப்படி எல்லாம் செலவழிக்கிறார்கள் பாருங்க. கோயம்புத்தூர் டு பாலக்காடு போக விமானமா ? என் கார்ல வர சொல்லுங்க, அதிகபட்சம் 30 டு 40 நிமிடங்கள் போதும்.


ஆரூர் ரங்
மார் 18, 2024 11:04

மதுரையில் இந்திரா காந்தி மீது கொலை வெறித் தாக்குதல், ராஜிவ்காந்தி கொலை, அத்வானி அவர்களைக் கொலை செய்ய கோவை குண்டுவெடிப்பு என்பதெல்லாம் கட்டுமர ஆதரவு ஆட்களின் சாதனைகள். இப்போதும் மோசமான ஆட்சி என்பதால் முழுமையான பாதுகாப்பு அவசியமே.


duruvasar
மார் 18, 2024 09:51

ரோடு ஷோவுக்கு பாதுகாப்பு இல்லை என அறிக்கை விட்ட ஐயா பாலகிருஷ்ணன் மனம் மாறி பாதுகாப்பு வேலைகளை முன்னின்று செய்ய வைத்த மாயம் என்னவோ ?


ஆரூர் ரங்
மார் 18, 2024 09:30

ராஜிவ் காந்திக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு செலவு என்று கேட்டது திமுக. சில காலத்திலேயே பாதுகாப்பு சரியாய் இல்லாததால் இங்கு கொலை செய்யப்பட்டார். இப்போது திமுக அக்குற்றவாளிகளை விடுதலை செய்து விருந்து கொடுத்து மகிழ்கின்றனர். இவ்வளவும் செய்த திமுக வின் அனுதாபிகள் மீண்டும் இப்போது பிரதமருக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு கெடுபிடி எனக் கேட்கின்றனர். எனவே SPG யுடன் மத்திய ரிசர்வ் போலீஸிடம். மட்டுமே???? பாதுகாப்புப் பொறுப்பை அளிக்கவேண்டும்.


R MANIVANNAN
மார் 18, 2024 13:02

ராஜிவ் கொலையின் பொது திமுக ஆட்சியில் இல்லை


Ramanujadasan
மார் 18, 2024 14:35

ஆமாம் . LTTE தீவிரவாத ஆதரவு செயல்கள் காரணமாக DISMISS செய்யப்பட்டது . அதன் செயல்கள் எவ்வளவு தூரம் உண்மை என நிரூபித்தது


Shekar
மார் 18, 2024 14:43

அந்த கொலைகாரர்களுடுன் உறவாடிய காரணத்தால் ஜனவரி 1991 இல் ஆட்சி கலைக்கப்பட்டது, அதில் நடந்த கூட்டு சதிதான் ராஜிவ் கொலை


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ