உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மழை வெள்ளம் சூழும் இடத்தில் தரைதளம் கட்டுவதற்கு தடை?

மழை வெள்ளம் சூழும் இடத்தில் தரைதளம் கட்டுவதற்கு தடை?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களில் தரைதள வீடுகள் கட்டுவதை தவிர்க்கும் வகையில், புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை பரிசீலித்து வருகிறது.மாநிலத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நீர் வழித்தடங்கள், நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகளில் மக்கள் குடியேறுவது அதிகரித்துள்ளது. இதனால், இப்பகுதிகளில் குடியிருப்பு திட்டங்களும் அதிகரித்துள்ளன.இந்நிலையில், மழைக்காலத்தில் நீர் வழித்தடங்கள், நீர் நிலைகள் நிரம்பும் போது, குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்படுகின்றன. அப்பகுதிகளில் ஆண்டில் சில மாதங்கள், மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.இந்த பின்னணியில், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், சமீபத்திய ஆண்டுகளில் வெள்ளம் பாதித்த பகுதிகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டன.இந்த இடங்களில், எவ்வளவு உயரத்திற்கு வெள்ளம் சூழ்ந்தது என்ற விபரம், பொதுப்பணித்துறை அதிகாரிகளால் அளவிடப்பட்டது.அந்தந்த பகுதிகளிலுள்ள கட்டடங்களில் இதற்கான குறியீடு வரையப்பட்டதுடன், திட்ட அனுமதி அளிக்கும் துறைகளுக்கும் இந்த விபரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.இந்த பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்காத வகையில், கட்டடங்களின் தரைமட்ட உயரத்தை அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.இதன் அடிப்படையில் கட்டட அனுமதிக்கான விதிகளில், தேவையான மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. வெள்ளம் வரும் போது, அடுக்குமாடி குடியிருப்புகளில் தரைதள வீடுகளில் வசிப்போர் தான், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.எனவே, அதிக வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களில், தரைதள வீடுகள் கட்டுவதை தவிர்க்கும் வகையில், உரிய கட்டுப்பாடுகளை பிறப்பிக்க பரிசீலித்து வருகிறோம்.இதனால், வெள்ளத்தால் வீடுகளுக்கு ஏற்படும் பாதிப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் என்பவர் கூறியதாவது:வெள்ள பாதிப்பு உள்ள இடங்களில் தரைதள வீடுகளை தவிர்க்க வேண்டும் என்பது, பொது நோக்கில் சரியானது தான். ஆனால், புதிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்கப்படும் நிலையில், தரை தளத்தில் வீடு கட்டக் கூடாது என்பதை அறிவுரையாக அளித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இதை கண்டிப்புடன் அமல்படுத்தினால், மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தும். அதே நேரத்தில், தனி வீடு கட்டுவோர் தரை தளத்தை தவிர்த்து, மேல் தளத்தில் வீடு கட்ட வேண்டும் என்றால், கூடுதல் செலவும் ஏற்படும். வங்கிக் கடன் வாயிலாக நிதி பெற்று வீடு கட்டும் நடுத்தர பிரிவினருக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, விதிகளை அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Lion Drsekar
பிப் 22, 2024 14:48

அதிகாரிக்கு பெயர் இல்லை போலும் . இவர்கள் பேசிய வெடியோவைப்போட்டு அதையே கேள்வியாக கேட்டாலே நான் அப்படி கூறவே இல்லையே என்று கூறும், இவர்களிடத்தில் பணிபுரியும் பெயர் கூட சொல்ல விரும்பாத ஒருவர் செய்தி . பரவாயில்லை . மேலும் யாருமே வீடு காட்டாமல் போனால் சம்பளம்,, பதவி உயர்வு விலை உயர்ந்த கார்கள் எப்படி வாங்கவது ? அதனால்தான் கீழ்த்தளத்தில் வீட்டு கட்டவேண்டாம், சரி அங்கு நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களுக்கு வழி ? மேலும் அந்த இடத்துக்கு செல்லும் பாதை, ரோடுகள் கதி ? மொத்தத்தில் இவர்கள் மழைநீர் வழிகளின் ஆக்கிரமிப்பின் மீது நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் மாறாக நீங்கள் மேல்தளத்தில் வீடுகட்டிக்கொள்ளுங்கள் அதற்கு எங்களுக்கு லஞ்ச, சந்தா ( வரி) கட்டுங்கள் என்ற செய்தி மிகுந்த வரவேற்கப்படவேண்டிய ஒன்று . வந்தே மாதரம்


Raa
பிப் 22, 2024 11:52

கொடுமையான கேவலமான பரிசீலனை. நீர் நிற்கும் இடங்களை வீடு கட்டக்கூடாது என்று விவாதிக்க வேண்டுமே தவிர, முதல் தளம் கட்டுவது பற்றி விவாதிப்பது கேவலம். சரிதான் என்று வாதாடினால், அணைத்து ஏரிகளிலும் ஆழத்தை பொறுத்து இரண்டாம் மற்றும் மூன்றாம் தளம் வரை அமைக்க பரிசீலனையும் செய்யுங்கள். துக்ளக் புலிகேசிதானே... என்னவேண்டுமானாலும் பரிசீலிக்கலாம்.


Arul Narayanan
பிப் 22, 2024 11:49

ஒரே அடியாக முதல் தளத்திற்கும் சேர்த்து தடை போடலாம்.


ராஜா
பிப் 22, 2024 09:55

ஒரு கார் சாதாரணமாகவே பத்து லட்சத்தை தாண்டுகிறது. அவை சேதம் ஆனால் இந்த அரசாங்கம் ஈடு செய்து விடுமா?


duruvasar
பிப் 22, 2024 08:20

இப்படி ஏதாவது குறுக்கு வழிதான் எங்களுக்கு தெரியும் என்பது போல் யோசிக்கிறார்கள். அது எந்த இடமாக இருந்தாலும் மழை நீர் தேங்காமல் வடிகாலில் ஓட வழிசெய்ய சிந்தியுங்கள். தனி வீடு வைத்திருப்பவர்களை என்ன செய்ய சொல்ல போகிறீர்கள்.


Mani . V
பிப் 22, 2024 06:57

மழை, வெள்ளம் சூழும் இடத்தில் (அதாவது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர் நிலை இடத்தில்) வீடு கட்ட தடை விதிக்க திராணி இல்லை. தரை தளம் அமைக்க மட்டும் தடையாம். ஓ, படகு போக்குவரத்துக்காக இந்த உத்தரவா? வெளங்கிரும்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி