உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்து போராட்டம்: பா.ஜ.,வினர் கைது: அண்ணாமலை கண்டனம்

கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்து போராட்டம்: பா.ஜ.,வினர் கைது: அண்ணாமலை கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலியை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 55 பேர் உயிரிழந்தனர். 160க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என பா.ஜ., குற்றம்சாட்டியது.இந்நிலையில், கள்ளச்சாராய பலியை கண்டித்தும், தடுக்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்தும் போராட்டம் நடத்தப் போவதாக பா.ஜ., அறிவித்தது. இதன்படி தமிழகம் முழுவதும் இன்று( ஜூன் 22) பா.ஜ.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டனர்.நீலகிரி மாவட்டம் ஊட்டியிலும் பா.ஜ.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவண்ணாமலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்தனர்.தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் பதவி விலகக் கோரி தெற்கு மாவட்ட பா.ஜ. தலைவர் சித்ராங்கதன் தலைமையில் இன்று மாலை நடந்த போராட்டத்தில் போலீசாருக்கும், பா. ஜ., தொண்டர்களுக்கிடையே தள்ளு,முள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் .புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்ற பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் அரண்மனை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினர் கைது செய்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.மதுரையில் நடந்த போராட்டத்தின் போது பா.ஜ., போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.சேலத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு முன்பாக பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து போலீசாருடன் பா.ஜ.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.கோவையில் பா.ஜ.,வினர் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாடை கொண்டு வந்தனர். ஆனால், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாஜ.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி பெறவில்லை எனக்கூறி போலீசார் அவர்களை கைது செய்தனர்.

கண்டனம்

பா.ஜ.,வினர் கைதுக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கள்ளச்சாராயம் விற்பனையைத் தடுக்காமல், ஐம்பதுக்கும் அதிகமான உயிர்களைப் பலி வாங்கிய திமுக அரசைக் கண்டித்து, பா.ஜ., சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், கிருஷ்ணகிரி என பல மாவட்டங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில், மூத்த தலைவர் எச்.ராஜா உட்பட நூற்றுக்கணக்கான பா.ஜ., சகோதர, சகோதரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.திமுக அரசின் நிர்வாகத் தோல்வியும், கள்ளச்சாராய வியாபாரிகளுடன் திமுகவினருக்கு உள்ள தொடர்பும், பொதுமக்களுக்குத் தெரிந்து விடக் கூடாது என்ற பதட்டத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பா.ஜ., சகோதர, சகோதரிகளை முடக்கப் பார்க்கிறது.இந்த அடக்குமுறைக்கு பா.ஜ., அஞ்சப் போவதில்லை. பிற மாவட்டங்களிலும், இன்று கள்ளச்சாராய மரணங்களுக்குக் காரணமான திமுக அரசைக் கண்டித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

RAMAKRISHNAN NATESAN
ஜூன் 22, 2024 20:44

மது குடித்து இறந்தவர்கள் என்னவோ தியாகிகள் போல அவர்களுக்கு 10 லட்சம் . போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு பலன்கள் , நிதி பற்றாக்குறை காரணமாக வழங்கப்படாமல் அல்லல் பட்டு வருகின்றனர். அரசு போக்குவரத்து கழக பஸ் மோதி விபத்து காரணமாக பலியானவர்கள் நீதி மன்றங்கள் உத்தரவு பிறப்பித்து ஆண்டுகள் கடந்தும் நஸ்ட ஈட்டு தொகை பெற முடியாமல் கஷ்டபட்டு வருகின்றனர்.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 22, 2024 20:42

காவல் நிலையம் அருகில் விற்கிறார்கள் அரசுக்கு தெரியாமலா நடந்து இருக்கும்? பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் இறந்தவர்கள், மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் போன்றவர்கள் எல்லாம் ஒரு லட்சம் நிவாரணத்திற்கு காத்து கிடக்கிறார்கள், இங்கே உடனடியாக பத்து லட்சம். எதை மறைக்க?


Kasimani Baskaran
ஜூன் 22, 2024 20:39

பங்காளிகள் ஆர்ப்பாட்டமே செய்யவில்லை போல தெரிகிறது.


பேசும் தமிழன்
ஜூன் 22, 2024 20:15

இந்த போராட்டம் நடத்த அனுமதி வாங்க வேண்டும் என்று கூறுவதை முதலில் நீக்க வேண்டும்.... அனுமதி யாருக்கு கிடைக்கிறது... ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கிறது.... எந்த அரசாவது தங்களை எதிர்த்து போராட்டம் நடத்த அனுமதி கொடுப்பார்களா?? இதற்க்கு மோடி அவர்களின் அரசு மட்டும் விதிவிலக்கு.... அந்த அரசை எதிர்த்து யார் வேண்டுமானலும் போராட்டம் நடத்தலாம்.


sankaranarayanan
ஜூன் 22, 2024 20:05

அதிமுக ஏன் இதற்கு போராட்டமே செய்யவில்லை ஒருகால் அவர்கள் ஆட்சியாளர்களுக்கு சாதகமாக இருப்பார்களோ இல்லை கொடநாடு விஷயத்தில் பயந்து தங்களை சிபிசிஐடி பிடிக்குமோ என்ற அச்சமோ தெரியவில்லையே. இல்லை அவர்களும் கூட்டுக்களவாணி செய்தவர்களானதால் மவுனம் சாதிக்கிறார்களோ தெரியவில்லையே


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 22, 2024 19:55

"சமூக நீதி, ஏழைகளுக்கு எதிரான நீட்" - முதல்வர் ஸ்டாலின் ....... போனவாரம் சொன்னது ...... இதுலேர்ந்து நாங்க புரிஞ்சுக்குறது கள்ளச்சாராயம் சமூக நீதிக்கும், ஏழைகளுக்கும் ஆதரவானது ....... சரிதானுங்களே ?????


P.M.E.Raj
ஜூன் 22, 2024 19:45

திமுகவிற்கு நேரம் சரியில்லை . எதிர்க்கட்சியாக இருக்கும்போது என்னென்ன அராஜக போராட்டங்கள் எல்லாம் பண்ணினார்கள். தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்றாமல் இந்த திருட்டு திமுகவினர் ஓயமாட்டார்கள்.


என்றும் இந்தியன்
ஜூன் 22, 2024 18:52

பா ஜ கவினர் போராட்டம் செய்தால் அது தவறு???திருட்டு திராவிடம் உளறினால் அதில் தவறே இல்லை???என்ன திருட்டு திராவிட மடியல் அரசு சரிதானே


மேலும் செய்திகள்









புதிய வீடியோ