உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொங்கல் களை கட்டியது: புத்தாண்டில் முதல் ஜல்லிக்கட்டு

பொங்கல் களை கட்டியது: புத்தாண்டில் முதல் ஜல்லிக்கட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை: இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் உற்சாகமாக துவங்கியது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜனவரி மாதம் நடத்தப்படும். புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. போட்டியை காண பொதுமக்களும் குவிந்துள்ளனர். மருத்துவக் குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=42scdqm4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சீறிப்பாயும் காளைகள்

புதுக்கோட்டை, திருச்சி ,மதுரை, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, இராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் இருந்து 750க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் இந்த போட்டியில் கலந்து கொள்ள வந்துள்ளது. போட்டியினை தமிழக சட்டதுறை அமைச்சர் ரகுபதி, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.வெற்றி பெற்ற காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பைக், மிக்ஸி கிரைண்டர், சேர் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. மொத்தம் பத்து சுற்றுகளாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் ஒரு சுற்றிக்கு 30 பேர் என மொத்தம் 300பேர் கலந்து கொள்வார்கள் என கமிட்டியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ghorimuhammad,Tanjore
ஜன 06, 2024 12:22

ஜல்லிக்கட்டு என்ற பெயரில் பாவம் இந்த வாயில்லா ஜீவன்களை சித்திரவதை படுத்துவதை சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே இந்த விபரீதமான ஜல்லிக்கட்டை உடனே தடை பண்ண வேண்டும்.


நந்தகோபால்
ஜன 06, 2024 18:45

மாட்ட வெட்டி கறி சாப்பிடும் போது அது வாயில்லா ஜீவன் தெரியலயா


ராஜா
ஜன 06, 2024 11:10

ஜல்லிக்கட்டுக்கு தடை போட்டாது கடைசியில்.... வெட்கம் கெட்ட திமுக.


ஆரூர் ரங்
ஜன 06, 2024 11:03

ஜல்லிக்கட்டு நடத்தும் போது தர்ஹாகளும் நடத்தலாமே. இந்த ஆட்சிக்கே காரணம்???? அவங்கதானே?


ஆரூர் ரங்
ஜன 06, 2024 11:00

வரும் மாடுபிடி நிகழ்வுகளுக்கு திமுக தன் நண்பரான ஜெயராம் ரமேஷ் அவர்களை அழைக்க வேண்டும். அவர்தானே திமுக துணையுடன் ஜல்லிக்கட்டைத் தடை செய்யும் சட்டத்தைக் கொண்டு வந்தது...


Ramesh Sargam
ஜன 06, 2024 09:22

திமுக அரசு ஜல்லிக்கட்டுக்கு எந்தவித தடையும் விதிக்கவில்லை போல தெரிகிறது. ஏன் என்றால், அவர்களுக்கு ஹிந்து எதுவும் பிடிக்காது, அதற்காக அப்படி கூறினேன்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை