உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக ரயில்களில் சி.பி.ஐ., அதிரடி ரெய்டு ; இதுவரை நடக்காதது : ஊழியர்கள் அதிர்ச்சி

தமிழக ரயில்களில் சி.பி.ஐ., அதிரடி ரெய்டு ; இதுவரை நடக்காதது : ஊழியர்கள் அதிர்ச்சி

சென்னை: ரயில்வே டிக்கெட் முறைகேடு மற்றும் ரயில் பராமரிப்பில் ஏற்பட்ட கோளாறு தொடர்பாக சேரன், பாண்டியன், நெல்லை, ராக்போர்ட் உள்ளிட்ட பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். பயணிகள் மற்றும் அலுவலர்களிடம் நடத்திய விசாரணை கலந்த சோதனையால் ரயில்வே ஊழியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இரவு நேரத்தில் ரயில்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஆங்காங்கே பல்வேறு ஸ்டேஷன்களில் தயாராக நின்று கொண்டிருந்த சி.பி.ஐ., அதிகாரிகள் பயணிகளோடு பயணிகளாக ரயில்களில் ஏறினர். பின்னர் பயணிகள் வைத்திருந்த டிக்கெட்டுகளை வாங்கி பரிசோதித்தனர். குறிப்பாக இ.கியூ., என்று சொல்லப்படும் அவசரகால ஒதுக்கீடு டிக்கெட்தாரர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். சிலரது நடைமுறையில் சந்தேகம் உள்ளவர்களிடம் எழுத்துப்பூர்வமாக அதிகாரிகள் எழுதி வாங்கினர். சி.பி.ஐ., அழைக்கும்பட்சத்தில் ஆஜராக தவறக்கூடாது என்ற நிபந்தனையுடன் பயணிகளின் பயணம் தொடர அனுமதிக்கப்பட்டது.மேலும் பணியில் இருந்த டி .டி.ஆரிடமும் விளக்கம் பெறப்பட்டது. இதில் சில ஊழியர்களிடமும் சி.பி.ஐ.,அதிகாரிகள் எழுதி வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்ந, எந்த ரயில்களில் சி.பி.ஐ., சோதனை? : இரவில் 7 ரயில்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. சேரன் எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம், பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒரே நேரத்தில் சோதனை நடந்தது. ரயில்களில் சி.பி.ஐ.ரெய்டு ஏன்? : பிரச்னைக்குள்ளானவர்கள் வீடு, முக்கிய அலுவலகம், எனதான் சி.பி.ஐ., ரெய்டு நடந்திருக்கிறது. இப்போது முதன்முறையாக ரயில்களில் ஏறி சி.பி.ஐ., ரெய்டு நடத்திருப்பது ரயில்வே ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரெய்டு நடந்ததற்கான காரணம் குறித்து விசாரிக்கையில்; சமீபகாலமாக எமர்ஜென்ஸி கோட்டாவில் வழங்கப்படும் டிக்கெட்டுகள், தட்கல் டிக்கட் முறைகேடாக பெறப்படுகிறது என்ற புகார் இருந்தது, பயணிகளுக்கு வழங்கப்பட்ட பெட்ஷீட்களில் சலவவை செய்தது தொடர்பாக ஒரு புகார் இருந்ததும், ரயில் பராமரிப்பு கோளாறு, ரயில் சுத்தப்படுத்துதல் பணியில் கான்ட்ராக்டர்கள்- அதிகாரிகள் கூட்டுக்கொள்ளை உள்ளிட்ட விவகாரங்கள் ஆகியன இந்த ரெய்டுக்கு காரணமாக இருக்கும் என ஒரு அதிகாரி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை