உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் ஆறாக ஓடும் கள்ளச்சாராய விற்பனை: அண்ணாமலை ஆவேசம்

தமிழகத்தில் ஆறாக ஓடும் கள்ளச்சாராய விற்பனை: அண்ணாமலை ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகம் முழுவதும் ஆறாக ஓடும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் திறனில்லாமல் தொடர்ந்து உயிர்கள் இழப்பிற்குப் பொறுப்பான மதுவிலக்குத் துறை அமைச்சர் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும்'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சியில் ஐந்து பேர், கள்ளச்சாராயத்துக்குப் பலியாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மரக்காணம், மதுராந்தகம் பகுதிகளில், கள்ளச்சாராயத்துக்கு 23 உயிர்களைப் பறிகொடுத்து ஒரு ஆண்டே ஆன நிலையில், கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த, திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாகியிருக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ec4veh24&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கள்ளச்சாராய வியாபாரிகளுடன், திமுக அமைச்சர் மஸ்தான் நெருங்கிய தொடர்பில் இருந்த விவரம் கடந்த ஆண்டே தெரியவந்தும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கண்துடைப்புக்காக நாடகமாடி, மீண்டும் ஐந்து உயிர்களைப் பறித்திருக்கும் திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழகம் முழுவதும் ஆறாக ஓடும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் திறனில்லாமல் தொடர்ந்து உயிர்கள் இழப்பிற்குப் பொறுப்பான மதுவிலக்குத் துறை அமைச்சர் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கும் அமைச்சர் மஸ்தான் மற்றும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காத துறை அமைச்சர் முத்துசாமி ஆகிய இருவரையும் உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

venugopal s
ஜூன் 19, 2024 20:17

இத்தனை ரயில் விபத்துக்களை பார்த்து இவருக்கு ஏன் ஆவேசம் வரவில்லை? பாஜக ரயில்வே துறை அமைச்சரிடம் இந்த மாதிரி கேள்விகள் கேட்க வேண்டியது தானே?


prathab
ஜூன் 20, 2024 09:10

என்ன செய்ய முடியும்.....


Maheesh
ஜூன் 19, 2024 20:09

போதை இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையில் தமிழகத்தில் குறைந்த பட்சம் ஒரு கோடி பேர் உள்ளனர். தொடர்ந்து போதையில் இருந்தால் அதை வாங்குவதற்கான பணம் கூட சம்பாதிக்க முடியாது. ஆகவே போதை குறுக்கு வழியை தேடச் செல்கிறது அதனால்தான் இந்த கள்ளச்சாராயத்தை மக்கள் வாங்கி குடிக்கின்றனர். வசதியுள்ள குடிகாரர்கள் குடி போதைக்கு மேலே போதையை தேடி போதைப் பொருட்களை நாடுகின்றனர். தமிழ்நாட்டில் மக்களுக்கு நல்லதை செய்வதில் உறுதியாக உள்ள கட்சி வந்தால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்.


கோவிந்தராஜ்
ஜூன் 19, 2024 19:35

டாஸ்மார்க் பார்க ளிலும் பெரும்பாலும் கலர் சாராயம் தான் விக்கபடுது ஆய்வு செய்தால் கண்டுபிடிக்கலாம் ஆணா செய்ய மாட்டர்கள் குரு நில மண்ணர்களின் வருமானம் பாதிக்கும்


raja
ஜூன் 19, 2024 17:08

உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்குத் தலா ரூபாய் பத்து லட்சமும் விற்றவர்களுக்கு தலா அயிந்து லட்ச்சமும் மாடல் ஆட்சி நடத்தும் முதல்வர் நிவாரணம் கொடுப்பார்.. ஏற்கனவே கொடுத்து இருக்காங்கள்ள...


Velan
ஜூன் 19, 2024 16:40

மாவட்ட ஆட்சியர் சாரயம் மரணத்து காரணம் அல்ல வாந்திபேதினு அறிக்கை விட்டுள்ளார் ?


Suppan
ஜூன் 19, 2024 16:34

சாராயம் காய்ச்சும் கட்சிக்காரர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுக்கும் இந்த அரசு. மாறாக கள்ளச்சாராயத்தைக் குடித்து செத்தால் அரசு பத்து லட்சம் கொடுக்கும். ஆக குடிப்பவர்களுக்கும் பிரச்சினை இல்லை.


ஆரூர் ரங்
ஜூன் 19, 2024 15:43

டாஸ்மாக் கடைகளில் பில் தருவதில்லையாம். அதனால் தரம் பற்றி நுகர்வோர் நீதிமன்றங்களில் புகாரளிக்க முடியவில்லை. பாட்டிலுக்கு பத்து ரூபாய் ஆட்டையைப்பற்றி வருமானவரி, அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும். கம்பெனி பதிவை ரத்து செய்ய முயற்சிக்க வேண்டும்.


YESPEE
ஜூன் 19, 2024 15:34

வெட்டி பேச்சு போல் உள்ளது


Kasimani Baskaran
ஜூன் 19, 2024 14:57

முதலில் கள்ளச்சாராயம்தானா என்பதையே உறுதிசெய்யவில்லை என்று உருட்டினார்கள். அதை வைத்துப்பார்த்தால் நல்ல சாராயம் என்று விற்ற கள்ளச்சாராயம் குடித்து செத்ததாகவே நினைக்கத் தோன்றுகிறது. ஆகவே சிபிஐதான் விசாரிக்க வேண்டும். லோக்கல் போலீஸ் விசாரித்து உண்மை வெளிவரும் என்று ஒருவரும் நம்பமாட்டார்கள்.


ஆரூர் ரங்
ஜூன் 19, 2024 14:50

கள்ளச் சாராயமா விஷச் சாராயமா என்பதை விளக்கமாகச் சொல்லுங்கள். இல்லாவிடில் முதல்வர் எப்படி நடவடிக்கை எடுப்பார்? விஷச்சாராயமாக இருந்தால் இறந்தவருக்கு விடியல் 10 லட்சம் கொடுப்பார். அதுவே கள்ளச்சாராயமாக இருந்தால் ஒன்றும் கிடைக்காது. அந்த வித்தியாசம் தெரியுமா?


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி