உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் பணியாளர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

ரேஷன் பணியாளர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

தேனி: மாநில முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் நாளை (மார்ச் 13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இதுகுறித்து தமிழக அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயசந்திரராஜா கூறியுள்ளதாவது: பொது வினியோக திட்டத்தில் மக்களுக்கு பயோமெட்ரிக் பதிவு செய்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக 2016ல் விற்பனை முனையங்கள் வழங்கப்பட்டன. அதனை மேம்படுத்தி வழங்க வேண்டும். எடை மோசடியை தவிர்க்க அத்தியாவசிய பொருட்களை பொட்டலமாக ரேஷன் கடைகளுக்கு வழங்க வேண்டும். பல மாவட்டங்களில் பொருட்களை ரேஷன் கடைகளில் இறக்க கட்டாய இறக்கு கூலி வசூலிக்கப்படுகிறது.பணியின் போது இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். வேறு மாவட்டங்களுக்கு பணிமாறுதல் கேட்கும் பணியாளர்களுக்கு இடமாறுதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கும் என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ