உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகையர் குறித்து அருவருப்பு பேச்சு காந்தராஜை கைது செய்ய தயக்கம்

நடிகையர் குறித்து அருவருப்பு பேச்சு காந்தராஜை கைது செய்ய தயக்கம்

சென்னை:நடிகையர் குறித்து ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசிய, டாக்டர் காந்தராஜை கைது செய்யாமல், போலீசார் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சேலத்தை சேர்ந்தவர் காந்தராஜ். அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர், 'யு டியூப்' சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழ் நடிகையர் குறித்து ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியுள்ளார்.இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் சினிமா விசாகா கமிட்டி தலைவர் நடிகை ரோகிணி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துஉள்ளார். மத்திய குற்றப்பிரிவு சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார், காந்தராஜ் மீது, ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். இவரை கைது செய்வதில் காலம் தாழ்த்தி வருகின்றனர்.இதுகுறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:நடிகையர் குறித்து காந்தராஜ் தொடர்ந்து பேசி வருகிறார். இவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசியதை வெளியில்கூட சொல்ல முடியாது. அந்தளவுக்கு அருவருப்பாக பேசி உள்ளார். கருணாநிதி, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ராஜாராமின் சகோதரர்.அரசியல் செல்வாக்கு காரணமாக, முன்ஜாமின் பெறும் வரை, கைது நடவடிக்கையை தவிர்க்க, விசாரணைக்கு அழைப்பது போல, காந்தராஜுக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

venkataraman vs
செப் 20, 2024 18:41

எஸ்வி சேகரையும் சவுக்கு சங்கரையும் விரட்டி விரட்டி பிடித்த போலீசு இந்த உளறுவாயனை கைது செய்யாமல் இருப்பது கண்டிக்கத் தக்கது. சேகர் கூடத்தான் மன்னிப்புக் கேட்டார்.


Jagan (Proud Sangi)
செப் 19, 2024 20:03

அவரு அவுங்க அம்மா, அத்தை , அக்கா தங்கச்சிய பாத்து வளர்ந்தவர், எனவே எல்லாரையும் அப்பிடி நினைச்சுட்டார் போல


Mallay siva
செப் 19, 2024 18:41

எச்சசோறு தின்பவர்கள் தான் இன்று எடப்பாடி திமுகவில் இருக்கின்றனர் இவர்களுக்கு தங்களைப் பற்றி மட்டுமே எண்ணக்கவலை?


Mallay siva
செப் 19, 2024 18:37

அஇஅதிமுக என்ற ஒரு கட்சி இருந்தது...... அந்த மாபெரும் தலைகள் 2 பேருடன் முடிந்தது...... இப்போது இ.வா. எ டரப்படி கழகம் தான் உள்ளது ..... யார் வேண்டுமானாலும் எப்படியோ பேசி விட்டு போனால் என்ன ... எச்ச சோறு தின்பவர்கள் தானே .....?


Ramesh
செப் 19, 2024 14:38

power ....


sureshpramanathan
செப் 19, 2024 12:12

this low value Dr who is a disgrace t his profession Can anyone at his age will talk all rubbish things People rubbish him or even curse this idiot


vbs manian
செப் 19, 2024 08:51

யு டுயூப் அலங்கோலம்.


Ravichandran S
செப் 19, 2024 08:11

அரசியல்வாதிகளுக்கு பொருந்தாது


நிக்கோல்தாம்சன்
செப் 19, 2024 08:09

ஒரு விதமான மனநோய் உள்ளவனோ


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 19, 2024 09:47

திராவிடம் பேசுபவர்களின் அடிமை வேறு எப்படி இருப்பான் ???? அவனது வீடியோ ஏதாவது ஒன்றைப்பார்த்தாலும் உங்களது சந்தேகம் உறுதியாகிவிடும் .......


அஸ்வின்
செப் 19, 2024 06:44

உள்ளத சொன்னா எரியுதோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை