உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செரிமான பிரச்னைக்கு தீர்வு: தீபாவளி லேகியம் அறிமுகம்

செரிமான பிரச்னைக்கு தீர்வு: தீபாவளி லேகியம் அறிமுகம்

சென்னை:தேசிய ஆயுர்வேத தினத்தையொட்டி, செரிமான பிரச்னைக்கு தீர்வு தரும் வகையில், 'டாம்ப்கால்' தயாரிப்பான தீபாவளி லேகியத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிமுகப்படுத்தினார்.சென்னை அரும்பாக்கம், சித்தா மருத்துவமனை வளாகத்தில், தேசிய ஆயுர்வேத தினத்தையொட்டி, விழிப்புணர்வு கையேடு வெளியிடப்பட்டது. தொடர்ந்து, 'டாம்ப்காலின்' புதிய தயாரிப்பான தீபாவளி லேகியத்தை அறிமுகம் செய்து வைத்தார். பின், அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:ஆயுர்வேத கண்காட்சியில், அன்றாட வாழ்க்கையில் நோய்கள் வராமல் காப்பது, உடலுக்கு சத்தான நவதானிய உருண்டை, மூலிகை தேநீர், கோதுமை லேகியம் போன்ற பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுஇருந்தன.'டாம்ப்கால்' என்ற இந்திய மருத்துவ முறையின், மருந்து தயாரிப்பு மையம், இந்தியாவிற்கே வழிகாட்டும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. அதன்கீழ் தயாரிக்கப்பட்ட செரிமானத்திற்கு உதவும் தீபாவளி லேகியம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

மூன்று மருத்துவமனைகள் மீது நடவடிக்கை

அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் போன்ற பழங்கால பாரம்பரிய மருத்துவ முறைகளை, பல்வேறு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கான, இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளை முடித்த மருத்துவர்கள், அவரவர் சார்ந்த துறையில் மட்டுமே பணிபுரிய வேண்டும்.அதனை தாண்டி, அல்லோபதி மருத்துவ முறைகளை பயன்படுத்தி மருத்துவம் பார்ப்பது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஒரு வாரத்தில் மட்டும், மூன்று மருத்துவமனைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை, நலம் மருத்துவமனையின் மீதும், இதுதொடர்பாக புகார் பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும், அனைத்து மாவட்ட இணை இயக்குனர்கள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், மாநிலம் முழுதும் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு செய்து, விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை