உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பல்கலைகளின் சிண்டிகேட்டில் மாணவர்களுக்கு பிரதிநிதித்துவம்?

பல்கலைகளின் சிண்டிகேட்டில் மாணவர்களுக்கு பிரதிநிதித்துவம்?

சென்னை : அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டியின், மாநில பொதுக்கல்வி பாதுகாப்பு மாநாடு, சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நுாலகர் பதவியை உருவாக்கி, புதிய நியமனங்கள் மேற்கொள்ள வேண்டும். பள்ளி நுாலகங்களை மேம்படுத்த வேண்டும். மகப்பேறு விடுப்பு, மருத்துவ விடுப்பில் செல்லும் ஆசிரியர்களுக்கு பதிலாக மாற்று ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். கல்வி கட்டணம் நிர்ணய குழுவில், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோரை நியமிக்க வேண்டும்.தமிழக பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், பொது பாடத்திட்டத்தை கைவிட வேண்டும். பல்கலைகளில் இயங்கும் செனட், சிண்டிகேட் அமைப்புகளில், பேராசிரியர்கள், மாணவர்களுக்கு சரியான பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை