உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டமில்நாடு என்பதை தமிழ்நாடு என்பதாக ஆங்கிலத்தில் எழுத்து மாற்ற கோரிக்கை

டமில்நாடு என்பதை தமிழ்நாடு என்பதாக ஆங்கிலத்தில் எழுத்து மாற்ற கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'தமிழ்நாடு' பெயரின் உச்சரிப்பு மாறாமல், அப்படியே அமையும் வண்ணம் ஆங்கில வடிவத்தில் TAMIL NADU (டமில்நாடு) என்பதை 'THAMIZH NAADU' என அரசு ஆவணங்களில் இடம் பெற நடவடிக்கை எடுக்க தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

கடம்பூர் செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:

தமிழின் சிறப்பு, 'ழ'கரம். இது தமிழ் தவிர நடைமுறையில் உள்ள எந்த மொழியிலும் இல்லை. இலக்கண, இலக்கிய வளத்தை உலகிற்கு பறைசாற்றும் நோக்குடன், நம் முன்னோர் திட்டமிட்டு பயன்படுத்திய எழுத்துதான் இச்சிறப்பு, 'ழ'கரம்.தமிழை, பிற மொழியைச் சேர்ந்தவர்கள் உச்சரிக்கும்போது இச்சிறப்பு குறையாமல் இருக்க, 'ழ'கரம் சரியாக உச்சரிக்கப்பட வேண்டும். இலக்கியச் சான்றுகளில் தமிழ், தமிழ்நாடு, தமிழ்ச்சங்கம் பற்றி காணலாம்.'தமிழ்நாடு' என்பதை ஆங்கிலத்தில் 'டமில் நாடு' என உச்சரிக்கும் வகையில் அதன் TAMIL NADU எழுத்து வடிவம் உள்ளது. இப்படி உச்சரிப்பதால் மொழிக்கான சிறப்பு வடிவம் முற்றிலும் சிதையும்.பிழையான ஒலிவடிவத்தில் எழுதுவது, பேசுவதால் நம் முன்னோர் எந்த நோக்கத்திற்கு 'ழ'கர உச்சரிப்பை எழுதி பயன்படுத்தினரோ அதை மாற்றி பொருளற்ற ஒலி, எழுத்து வடிவத்தை, பிரிதோர் மொழியில் கையாள்வது, வடிவமைப்பது வரலாற்றுத் தவறு.'தமிழ்நாடு' பெயரின் உச்சரிப்பு மாறாமல், அப்படியே அமையும் வண்ணம் ஆங்கில வடிவத்தில் TAMIL NADU - டமில்நாடு என்றிருப்பதை, THAMIZH NAADU என அரசு ஆவணங்களில் இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.கர்நாடகாவில் அம்மாநிலத்திற்கென தனிக்கொடி உருவாக்கப்பட்டுள்ளது. அது தேசியக் கொடி அருகே அரசு நிகழ்ச்சிகளில் இடம்பெறுகிறது. பண்டைக் காலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த மூவேந்தர்களின் மீன், புலி, வில் அம்பு சின்னங்களை கொண்ட கொடியை உருவாக்க வேண்டும். அது அரசின் நிகழ்ச்சிகளில் இடம்பெற வலியுறுத்தி பிரதமர் அலுவலக முதன்மைச் செயலர், உள்துறை செயலர், தமிழக தலைமைச் செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறி இருந்தார்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு அளித்த தீர்ப்பில், மனுவை மத்திய, மாநில அரசுகள் விரைவாக பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Venkatesan Sagadevan
நவ 25, 2024 14:39

முதலில், தமிழ் நாட்டில் உள்ள எல்லா பெயர் பலகைகளில் ஆங்கிலத்தில் உள்ள தமிழ் வார்த்தைகளை தமிழில் மாற்றம் செய்யவும் .


Ramesh Sargam
நவ 21, 2024 14:28

ஒரு சிலருக்கு பொழுதுபோகவில்லையென்றால், இப்படி ஒரு பிரச்சினையை கிளப்பி விட்டு வேடிக்கை பார்ப்பார்கள்.


Murthy
நவ 21, 2024 13:29

zhl என்று எழுதவேண்டும் . ....zh மட்டும் எழுதுவதால் ஷா என்று உச்சரிக்கிறார்கள் .


Indianதமிழன்
நவ 21, 2024 12:03

ஐயா, Nadu என்பதை Naadu என எழுத வேண்டுமெனில் , roja = Rojaa, Jam=Jaam, India = Indiaa, காந்தி=Gaandhi , pakistan = Paakistaan, stalin = Staalin, kerala = Keralaa . தொடர்ந்து "aa" என வரும் ஆங்கில வார்த்தை இருந்தால் கூறவும். "ழ" வை குறிப்பதற்கு Zh எனில், ல மற்றும் ள வை வேறுபடுத்த என்ன ஏற்பாடு? "வ" என்ற எழுத்தே bangla மொழியில் கிடையாது ஆனால் தமிழில் அதனை வங்க மொழி என அழைகிறோமே ? தமிழுக்கு என இலக்கண மரபு இருப்பது போன்று ஆங்கிலத்திற்கும் மற்ற மொழிக்கும் மரபு உண்டு அல்லவா ?


அன்பு
நவ 21, 2024 18:50

ஆங்கிலம் எப்படி வேண்டுமானாலும் எழுதட்டும், பேசட்டும், உச்சரிக்கட்டும். நமது மொழியை ஒழுங்காக பேச எழுத பழகுவோம்.


duruvasar
நவ 21, 2024 12:03

அப்படி மாற்றஅம் செய்தால் அது டமில் நாடு என்று பெயர் வைத்ததை ஒப்புக்கொண்ட அறிஞர் அண்ணாவுக்கு செய்யும் அவமரியாதையாகிவிடும். அது போக தமிழ்நாட்டில் எந்த்னை சதவிகிதம் பேருக்கு அமைச்சர் பெருமக்கள் ,ஊட்டப்பட தமிழ்நாடு என உச்சரிக்க வரும் நண்பரே ? இப்படி உணர்ச்சிகளைவைத்தே பிழைப்பு நடத்துவது இன்னும் எவ்வளவு காலம் தொடருமோ ?


ஆரூர் ரங்
நவ 21, 2024 11:55

எல்லா திமுக தலைவர்களும் நெடுஞ்செழியன் அன்பழகன் என்றெல்லாம் பெயரை தமிழில் மாற்றிக்கொண்ட போதும், கருணாநிதி மட்டும் அண்ணாவைக் கெஞ்சிக் கூத்தாடி பழைய பெயரிலேயே தொடர்ந்து அரசியல் செய்தார். ஆனால் MADRAS ( பழந்தமிழில் மாதரசிப் பட்டினம்) என்பதை சென்னை என்ற தெலுங்குப் பெயருக்கு மாற்றினார். ஓங்கோல் பாசம்.


தமிழ்வேள்
நவ 21, 2024 11:31

மாநிலக்கொடி என்பது தேவையற்றது ....தமிழகத்தை டாஸ்மாக்குநாடு என்று அழைக்கலாம் இங்கு சாராயக்கடை மட்டுமே அதிகம் உள்ளது


Shekar
நவ 21, 2024 09:54

கேவலம், நீதிமன்றங்கள் பொழுதுபோக்கும் மன்றங்களாகிவிட்டன. கேஸ் போட்டவன்னுக்கு அபராதம் போட்டு, முதல்வரிடம் கோரிக்கை வை, அப்படின்னு விரட்டிவிட்டிருக்க வேண்டாம்?


Barakat Ali
நவ 21, 2024 09:46

ழ உச்சரிப்பை சரியாகப்பின்பற்றுவோர் மிகவும் குறைவு - அந்த மூன்று சதவிகிதத்தினர் கூட பரவாயில்லை .... "தம்முலு எனது உயிர் மூச்சு" என்று கூறுகிறது திராவிடியாள் மாடல் .....


T Jayakumar
நவ 21, 2024 09:41

முதலில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு லகர, ழகர, ளகர பிழையின்றி எழுத, பேச கற்றுக் கொடுங்கள்.


அன்பு
நவ 21, 2024 17:55

தமிழை ஆங்கிலத்தில் எழுதுவோர் தமிழ் நாட்டில் அதிகம். அப்படி திராவிடம் பேசி பேசி தமிழன் தலையில் மிளகாய் அரைத்து வரும் திராவிட பங்காளிக் கட்சிகள் எழுபதாண்டு காலமாக தமிழ் வளர்த்த இலட்சணம் இது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை