| ADDED : ஜன 25, 2024 12:56 AM
சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக பதவி வகிக்கும் இருவர், ராஜினாமா செய்துள்ளனர்.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். கூடுதல் அட்வகேட் ஜெனரலாக, 11 பேர் நியமிக்கப்பட்டனர். அட்வகேட் ஜெனரலாக பதவி வகித்த சண்முகசுந்தரம், சமீபத்தில் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, புதிய அட்வகேட் ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் நியமிக்கப்பட்டார். தற்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பதவி வகித்த சிலம்பண்ணன், வி.அருண் ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளனர். தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக, மூத்த வழக்கறிஞர் சிலம்பண்ணன் தெரிவித்துள்ளார். கட்சியில் சட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக ராஜினாமா செய்வதாக, வழக்கறிஞர் அருண் தெரிவித்துள்ளார்.