உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நவோதயா பள்ளிகளை அனுமதிக்க கோரி பிராமணர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

 நவோதயா பள்ளிகளை அனுமதிக்க கோரி பிராமணர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: 'தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க, தமிழக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்' என, தமிழ்நாடு பிராமணர் சங்க பொதுக் குழுக் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் 16ம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம், ஈரோடில் கடந்த 21ம் தேதி நடந்தது. மாநிலத் தலைவர் சி.ஜி.வி.கணேசன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் பம்மல் ராமகிருஷ்ணன் மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், தமிழக அரசு நீண்டகாலமாக கிடப்பில் போட்டுள்ள, 10 சதவீதம் பொருளாதாரத்தில் பின் தங்கிய, உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை, தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில், நவோதயா பள்ளிகள் திறக்க, தமிழக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில், தமிழக அரசு நடுநிலையாக செயல்பட்டு, மலையில் தீபம் ஏற்ற, முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் 'நீட்' தேர்வுகளை, தமிழகத்தில் ரத்து செய்யக் கூடாது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ளது போல், தமிழகத்தில் நலிந்த, ஏழை பிராமணர்களுக்கு, தனியாக ஒரு நல வாரியம் அமைக்க வேண்டும். வர உள்ள சட்டசபை தேர்தலில், ஹிந்துக்கள் மற்றும் பிராமணர்கள் சமூகத்துக்கு பாதுகாப்பாக, ஒத்துழைப்பாக செயல்படும் கட்சி களுக்கு, ஆதரவு அளிக்கப்படும். தேர்தல் அறிவித்ததும், முறையான அறிவிப்பு வெளியிடுவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி