உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் நியமனம்

தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ளார்.ராமசுப்பிரமணியன், தமிழகத்தில் மன்னார்குடியில் பிறந்தவர். சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து விவேகானந்தா கல்லுாரியில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். சென்னை சட்டக்கல்லுாரியில் சட்டம் படித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p1o2i8ps&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றிய இவர், 2006ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2009ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.பின்னர் தெலுங்கானா மற்றும் ஆந்திரா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட அவர், இமாச்சல் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2019ல் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.தன் பதவிக்காலத்தில் பல்வேறு சிறப்பான தீர்ப்புகளை வழங்கியதாக, பாராட்டுக்களை பெற்றவர் நீதிபதி ராமசுப்பிரமணியன். அவர் பணி ஓய்வு பெற்ற நிலையில், தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக தற்போது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Bala
டிச 24, 2024 05:14

வாழ்த்துக்கள் சார். வாழ்க வளமுடன். உங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவனை அந்த ஐயப்பனை வேண்டுகிறேன்


Selvaraj K
டிச 23, 2024 22:19

மத்திய மாநில மனித உரிமை ஆணை செயல் பாடுகள் காவல் துறைக்கு அதாவது அதிகாரத்துக்கு ஆதரவாக தான் இருக்கும் பாதிக்கப்பட்டவனுக்கு இல்லை


r ravichandran
டிச 23, 2024 21:07

செந்தில் பாலாஜி வழக்கில் மறு விசாரணைக்கு உத்தரவிட்டு , உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை கடுமையாக விமர்சனம் செய்து அதை ரத்து செய்தார். மிகவும் நேர்மையாளர் என்று பெயர் எடுத்தவர். வாழ்த்துக்கள்.


MUTHU
டிச 23, 2024 20:35

மனித உரிமைகள் ஆணையம் என்பது ஆட்டுக்கு தாடி.


G Mahalingam
டிச 23, 2024 22:12

தமிழக லஞ்சம் ஒழிப்பு துறை. தமிழக போலீசார் கோபாலபுரத்துக்கு தாடி.


kantharvan
டிச 23, 2024 23:36

நாட்டுக்கு மோடி???


Jagan (Proud Sangi)
டிச 23, 2024 20:04

செந்தில் பாலாஜி கேஸை தூசி தட்டி எழுப்பியவர் இவர். இவர் முன் உச்ச கோர்ட்டில் அந்த கேஸ் வரக்கூடாது என்று பல கோடிகள் இறைக்க தயார் நிலையில் இருந்தார் "பத்து ருபாய்" ஆனா இவர் நீதியின் பக்கம் நின்றார். எவ்ளோ ஏசினாலும் மிரட்டினாலும் "ஆரியர்களை" காசு குடுத்து வாங்க முடியாது என்பதால் தான் திருட்டு திராவிடம் எப்போது அவர்களை பழிக்கிறது


kantharvan
டிச 23, 2024 23:36

அடேங்கப்பா இது உலகமகா உருட்டுடா ? கிரிப்டோ ஜெகன் . காசு கொடுத்து வாங்க முடியாதயா ? வருஷ கடைசில பெஸ்ட் ஜோக் .


Skn
டிச 23, 2024 19:12

வாழ்த்துக்கள்


சாண்டில்யன்
டிச 23, 2024 19:11

இவர் உச்சநீதிமன்ற நீதியரசர் என்பதைவிட சிறந்த தமிழறிஞர் என்பது சிறப்பு. மனித உரிமை ஆணைய தலைவராக நியமிக்கப் பட்டுள்ளது தமிழுக்கும் நம் தமிழ்நாட்டுக்கும் பெருமையளிக்கும் செய்தி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை