மேலும் செய்திகள்
தாலுகா அலுவலகத்தில் அலுவலர்கள் வெளிநடப்பு
19-Feb-2025
சென்னை: ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்ரல், 25ல், ஒரு மணி நேரம் வெளிநடப்பு போராட்டம் நடத்த, வருவாய் துறை அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர்.வருவாய் துறை சங்கங் கள் கூட்டமைப்பின் உயர்மட்ட குழு கூட்டம், கோவையில் நேற்று முன்தினம் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முருகையன், குமார், பூபதி, ராஜா, திருமலைவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அவர்கள் வெளியிட்டு உள்ள அறிக்கை:வருவாய் துறை அலுவலர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய, சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். மன அழுத்தம் ஏற்படும் பணிச்சுமை கொடுக்கக் கூடாது, வருவாய் துறை அலுவலர்களுக்கு தனி ஊதியம் வழங்க வேண்டும். கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பை மீண்டும், 25 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும், காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஜூலை 1ம் தேதியை வருவாய் துறை தினமாக அறிவிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் நிர்வாகிகளை அழைத்து பேசி, அரசு சுமூக சூழ்நிலை ஏற்படுத்த வேண்டும் ஆகிய ஏழு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.இதை வலியுறுத்தி, ஏப்ரல், 7 முதல், 15 வரை, அனைத்து மாவட்டங்களில் ஊழியர் சந்திப்பு பிரசார இயக்கம் நடத்தப்படும். ஏப்ரல் 25ல், 40,000 வருவாய் துறை ஊழியர்கள் கலந்து கொள்ளும் ஒரு மணி நேர வெளிநடப்பும், மாவட்ட, தாலுகா தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
19-Feb-2025