உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தானியங்கி வாகன பரிசோதனை அக்., முதல் தமிழகத்தில் அமல்

தானியங்கி வாகன பரிசோதனை அக்., முதல் தமிழகத்தில் அமல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நேரு யுவகேந்திரா, சென்னை மாநகராட்சி போக்குவரத்து துறை, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை மற்றும் குருநானக் கல்லுாரி ஆகியவை இணைந்து, சென்னையில் நேற்று தேசிய இளைஞர் வாரம் மற்றும் சாலை பாதுகாப்பு வார விழாவை நடத்தின.அதில், தமிழக அரசின் போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் பேசியதாவது:கடந்த, 2015ல் உலக நாடுகளுக்கு, 17 இலக்குகள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் முக்கியமாக, 2030க்குள் விபத்துகளின் எண்ணிக்கை பாதியாக குறைய வேண்டும். அதன் அடிப்படையில், மத்திய அரசு மூன்று முடிவுகள் எடுத்துள்ளது.அதில், 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வாகனங்கள் நல்ல நிலையில் இல்லாவிட்டால், அவற்றை கழிக்க வேண்டும். அந்த நடைமுறை ஓரிரு மாதங்களில், தமிழகத்தில் வந்து விடும்.தமிழக அரசின் போக்குவரத்து வாகனங்கள், 10,750 உள்ளன. முதல் கட்டமாக அவற்றில், 15 ஆண்டுகள் கடந்த வாகனங்கள் அழிக்கப்பட உள்ளன.அடுத்ததாக, தானியங்கி பரிசோதனை பிரிவு. தற்போது உள்ள வாகனங்களை, 'பிரேக் இன்ஸ்பெக்டர்'கள் பரிசோதனை செய்கின்றனர். இனி நவீன தொழில்நுட்ப முறையில், இயந்திரங்கள் கொண்டு பரிசோதனை செய்யப்பட உள்ளது.முதல் கட்டமாக தமிழகத்தில், 20 இடங்களில் இந்த மையங்கள் உருவாக்கப்பட உள்ளன. வரும் அக்., மாதம் முதல், அனைத்து வாகனங்களும் தானியங்கி பரிசோதனை மையத்தின் வாயிலாக பரிசோதனை செய்து, எப்.சி., சான்றிதழ் வழங்கப்படும்.மூன்றாவதாக அனைத்து வாகனங்களுக்கும், அவை இருக்கும் இடம் காட்டும் கருவி பொறுத்தப்பட உள்ளது. இதனால், அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ்., கருவி கட்டாயமாகி விடும். அந்த திட்டமும் தமிழகத்தில் விரைவில் வர உள்ளது.ஓட்டுனர்கள் முறைகேடாகவோ, சமூக விரோத செயலிலோ ஈடுபட்டால், வாகனத்தில் உள்ள பொத்தானை அழுத்தினால், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்று விடும். அங்கிருந்து வாகனம் எங்கு உள்ளது என அறிந்து, அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் பரிமாறப்படும்.கடந்த 1974 முதல் ஆண்டுதோறும் வாகன எண்ணிக்கை, 10 சதவீதம் அதிகரித்து வருகிறது. ஆனால், சாலைகளின் விரிவாக்க வசதி, 4 சதவீதமாக மட்டுமே உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

g.s,rajan
ஜன 13, 2024 22:34

பேப்பர் ரோஸ்ட் சாலைகள் ,பல்லாங்குழிச் சாலைகளால் எப்போதும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்துதான் ,ஹமிழ்நாட்டில் பல இடங்களில் சாலைகள் போட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது அப்படிப் போட்டாலும் அது பேப்பர் ரோஸ்ட் சாலைகள் தான் போடப்படுகிறது அது எப்படித் தாங்கும்..???போட்ட சில நாட்களுக்குள் அவை எல்லாம் பல்லை இளிக்கின்றன.... .


M.S.Jayagopal
ஜன 13, 2024 19:19

நகரத்திற்குள் சாலைகளின் தரம் எப்பொழுதும் மிகவும் மோசமாக உள்ளது.நான் பல ஆண்டுகளுக்கு முன் வாங்கிய சுசூகி பைக்கில் முதலில் பாதிப்பு அடைந்தது ஷாக் அப்சர்பர்தான்.


rama adhavan
ஜன 13, 2024 15:09

முடிந்தவரை அரசு கடுமையான கட்டுப்பாடுகளுடன் தனியாரிடம் ஒப்படைக்கவும். அரசு வசம் வேண்டாம். அதே ஊழல் தொடர அதிக வாய்ப்பு உண்டு.


Varadarajan Nagarajan
ஜன 13, 2024 11:10

ஓராண்டுகூட தாங்காத தரமற்ற சாலைகள், நெடுஞ்சாலைகளில் எந்தவித எச்சரிக்கை பலகையும் இல்லாமல் அப்பத்தான் இடங்களில் போக்குவரத்து போலீஸ் தடுப்புகளை வைப்பது, லஞ்சம் பெற்றுக்கொண்டு எந்தவித சோதனையும் இல்லாமல் ஓட்டுநர் உரிமம் கொடுப்பது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, சாலை விதிகளை பின்பற்றாமல் ஓட்டுவது, கண்களை கூசுவது போன்ற எல் இ டி முகப்பு விளக்குகளை அமைப்பது, பீதியடைய செய்யும் அலறும் ஏர் ஹாரன்கள், லஞ்சம் பெற்றுக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கண்ணை மூடிக்கொண்டிருக்கும் போக்குவரத்து போலீஸ் என ஒரு நீண்ட பட்டியலையே சொல்லலாம் விபத்துகளுக்கு காரணமாக. இந்த விஷயத்திலும் நாம் முதன்மை மாநிலமாக உள்ளோம் என்றும் நாம் பெருமை கொள்ளலாம்.


ராஜா
ஜன 13, 2024 06:19

முதலில் ஒழுங்காக சாலைகளை போட்டுவிட்டு இதையெல்லாம் செய்ய வேண்டும். குண்டும் குழியுமான சலைகளால் நேற்று வாங்கிய வாகனங்கள் கூட 15 வருடம் பழையது போல் காட்சி அளிக்கிறது.


Kundalakesi
ஜன 13, 2024 03:33

So cost of vehicles to go up. Toll price will increase twice a year. Fuel price will increase after election. Vandhe Maatharam.


Raja
ஜன 13, 2024 06:16

When fuel price got reduced in Tamilnadu? They havent reduced anything in Tamilnadu even central government reduced from their end twice. Please try to be transparent on your comments.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி