உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சியில் ரூ.15.5 லட்சம் பணம், ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சியில் ரூ.15.5 லட்சம் பணம், ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.15.5 லட்சம் பணம் மற்றும் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கத்தை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். ஹவாலா பணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை மூத்த கோட்ட ஆணையர் அபிஷேக், உதவி கோட்ட ஆணையர் பிரமோத்நாயர், ஆய்வாளர் செபாஸ்டின் தலைமையிலான போலீசார் திருச்சி ரயில்வே சந்திப்பில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சென்னையில் இருந்து திருச்சி வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த மதுரையை சேர்ந்த லட்சுமணன் (26) என்பவரின் உடைமைகளை சோதனை செய்தனர்.அவரிடம் இருந்து, ரூ.15.5 லட்சம் பணம் மற்றும் ரூ.2 கோடி மதிப்புள்ள 2 கிலோ 795.90 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வணிக வரித்துறையினர் மூலம் பணம் மற்றும் தங்கத்தை கணக்கிடும் பணி நடந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், ஹவாலா பணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஜூலை 10, 2024 17:50

முன்பெல்லாம் விமானம் மூலம் கடத்தல் செய்வார்கள். இப்பொழுது ரயிலில் கூட. ஆக என்ன முன்னேற்றம் திமுக அரசியலில். மெச்சுகிறேன் முதல்வர் ஸ்டாலின் அவர்களை.


V RAMASWAMY
ஜூலை 10, 2024 15:26

கூடிய சீக்கிரம் திருச்சி கள்ளக்கடத்தல் தலைநகரமாகி விடும் போலிருக்கிறதே.


R Kay
ஜூலை 10, 2024 13:43

பெயர் சரிதானா?


வாய்மையே வெல்லும்
ஜூலை 10, 2024 13:01

நியாயமாக நூறு ரூபா சமரிக்கறதுக்குள்ள வேர்த்து விடியுது.. இங்க என்னடான்னா சர்வசாதாரணம் கோடியில் ஹவாலா பணம் சுத்துது .. பிடிச்சு நசுக்குங்க ஆபீஸர்ஸ் விடாதீங்க


Pandi Muni
ஜூலை 10, 2024 13:41

வேர்வை சிந்த சம்பாதிச்சதை எவனும் புடிங்கிகிட்டு போகமாட்டன். இல்லையா?


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி