உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; குற்றவாளி பற்றி தெரிவித்தால் ரூ.5 லட்சம் சன்மானம்; போலீஸ் அறிவிப்பு

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; குற்றவாளி பற்றி தெரிவித்தால் ரூ.5 லட்சம் சன்மானம்; போலீஸ் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளியை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று தமிழக போலீஸ் அறிவித்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்த சிறுமியை மர்ம ஒருவர் பின்தொடர்ந்து சென்று கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை அளித்தது.இந்த நபர் பற்றிய எந்த தகவலும் இது வரை கிடைக்காத நிலையில், சிசிடிவி கேமிராவில் பதிவான குற்றவாளியின் தெளிவான படத்தை தமிழக போலீஸ் வெளியிட்டது. மேலும், அந்த மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.சம்பவம் நடத்து பல நாட்கள் கடந்தும், குற்றவாளி பிடிபடாத நிலையில், அவனை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் 99520 60948 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு கூறலாம் என்று தமிழக போலீஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.மேலும், தேடப்படும் குற்றவாளியை பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் தமிழக போலீஸ் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது. தகவல் தருபவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீஸ் கூறி உள்ளது. இந்த அறிவிப்புடன், தேடப்படும் நபரின் போட்டோக்களையும் போலீஸ வெளியிட்டு இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Padmasridharan
ஜூலை 22, 2025 10:22

"தகவல் தருபவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீஸ் கூறி உள்ளது" Network Error என்று சொன்னது ஞாபகமிருக்கின்றதா பல்கலை மாணவி விஷயத்தில். இவ்வாறு பல ரகசியங்களும் பணமாக்கி இருக்கின்றனர் அவர்களுள் சாமி.


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 22, 2025 00:57

வடக்கன்னு பார்த்தாலே பளிச்சுன்னு தெரியுது


பேசும் தமிழன்
ஜூலை 22, 2025 08:09

வடக்கனோ தெற்கனோ குற்றவாளி கைது செய்யப்பட வேண்டும்.... தண்டிக்கப்பட வேண்டும்.... அதை செய்யாத விடியாத அரசின் காவல் துறையை என்ன சொல்ல ???


நிமலன்
ஜூலை 21, 2025 22:19

ஐந்து லட்சம் சன்மானம் என்பது கண்துடைப்பு. தமிழக காவல் துறை உண்மையாக முயற்சித்தால் 2 நாட்களில் பிடித்து விடுவார்கள். அவ்வளவு திறமைசாலிகள். யாருக்காகவோ வலை மட்டும் வீசிக்கொண்டிருக்கிறார்கள் போல் தோன்றுகிறது.


Barakat Ali
ஜூலை 21, 2025 21:18

கள்ளச்சாராயம் குடிச்சு மரணித்தால் பத்து லட்சம் ........ குற்றவாளியைப் பற்றி துப்புக்கொடுத்தால் ஐந்து லட்சம் ......... சபாஷ் விடியல் சார் ...........


theruvasagan
ஜூலை 21, 2025 21:18

இதுக்கு பின்னாடியும் ஏதாவது சார் உண்டா என்று கூட விசாரிக்கணும்.


ديفيد رافائيل
ஜூலை 21, 2025 20:47

ஆளுங்கட்சி support பண்ற ஆளா இருப்பான் அவனை காட்டி கொடுத்து கூலிப்படை மூலம் மரணம் ஏற்படும். Police பாதுகாப்பு கூட தர மாட்டானுங்க காட்டிக் கொடுத்தவனுக்கு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை