உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 100 பஸ்கள் வாங்க ரூ.91 கோடி தாங்க! சி.எம்.டி.ஏ.வுக்கு எம்.டி.சி. கடிதம்

100 பஸ்கள் வாங்க ரூ.91 கோடி தாங்க! சி.எம்.டி.ஏ.வுக்கு எம்.டி.சி. கடிதம்

சென்னை : 'வெளியூர் செல்வோர் வசதிக்காக, 100 தாழ்தள பஸ்கள் வாங்க, 91 கோடி ரூபாய் நிதி உதவி வேண்டும்' என, எம்.டி.சி.,யான மாநகர போக்குவரத்து கழகம், சி.எம்.டி.ஏ.,வான சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்திற்கு கடிதம் எழுதி உள்ளது.சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்களுக்காக, கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதனால், சென்னையின் பல்வேறு பகுதி மக்களும், கிளாம்பாக்கம் செல்ல, மாநகர பஸ்கள் பிரதான தேவையாக உள்ளன.இது தொடர்பாக, மாநகர் போக்குவரத்து கழகம், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலருக்கு எழுதியுள்ள கடிதம்:சென்னையில் தற்போதைய நிலவரப்படி, தினமும், 659 வழித்தடங்களில், 3,233 நடைகள் மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட்டதால் தேவை அதிகரித்துள்ளது.இதனால், கிளாம்பாக்கத்துக்கு மக்கள் சென்று வர, தினமும், 298 பஸ்களை, 2,990 முறை இயக்க வேண்டியுள்ளது. இதற்காக வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்ட பஸ்கள், கிளாம்பாக்கத்துக்கு மாற்றி விடப்பட்டுள்ளன.இந்நிலையில், அதிக சுமைகளுடன் வெளியூர் செல்வோரின் தேவை கருதி, அதிநவீன வசதிகள் உடைய, 100 தாழ்தள பஸ்கள் வாங்க திட்டமிட்டு, தமிழக அரசு வாயிலாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.எனவே, புதிய பஸ்கள் வாங்கும் செலவை சமாளிக்க, 91 கோடி ரூபாயை, சி.எம்.டி.ஏ., நிதியில் இருந்து கொடுத்து உதவ வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சி.எம்.டி.ஏ.,வின், 50 ஆண்டு கால வரலாற்றில், முதல்முறையாக பஸ்கள் வாங்க நிதி உதவி அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

R. Vidya Sagar
ஜன 22, 2024 21:31

கிளம்பாக்கம் பஸ் நிலையம் அவ்வளவு அவசரப்பட்டு திறக்க என்ன காரணம்?


Sivagiri
ஜன 22, 2024 20:34

அமலாக்கத்துறை மூலம் , ஒரு முப்பது வருஷ கணக்குகளை ஸ்பெஷல் ஆடிட்டிங் செய்து , போக்குவரத்து கழகத்தின் பணம் எந்தெந்த கழகத்திற்கு , எங்கே போனது என்று மெகா ரைடு நடத்தி கொள்ளை போன பணத்தை மீட்டால் தேவலை , - - மத்திய அரசின் பொது துறை நிறுவனங்களின் பங்குகளை பொதுமக்களுக்கு விற்பதன் மூலம் நிதி திரட்டப் படுகிறது , அதோடு ஊழியர்களுக்கும் சிறு பங்கு விற்கப்படுகிறது - அதே போல தமிழ்நாட்டு போக்குவரத்து கழகத்தின், பங்குகளை பொதுமக்களுக்கும் / ஊழியர்களுக்கும் , விற்று வரும் நிதியில் கடன்களை அடைத்து சீரமைத்தால் , கொஞ்சம் தப்பிக்கலாம் , அதோடு நிறுவனமும் கட்சிக்காரர்கள் - அமைச்சர்கள் - தரகர்கள் - காண்ட்ராக்டர் கொள்ளை அடிப்பதை தடுக்கலாம் . . . ஊழியர்களுக்கும் பொறுப்பை கொடுக்கலாம் . . .


Mani . V
ஜன 22, 2024 15:40

ஒரு பஸ்ஸின் விலை கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாயா? நல்லா கொள்ளையடிக்கிறாங்கப்பா.


ArGu
ஜன 22, 2024 14:10

பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்


Chennaivaasi
ஜன 22, 2024 11:58

தமிழ்நாடு போக்குவரத்து நிதி நிறுவனத்திடம் கோவில் பணம் சுமார் 200 கோடியை அறநிலையத்துறை முதலீடாக இருப்பு வைத்ததாக செய்தி வந்ததே. அந்த பணம் என்ன ஆயிற்று?


Narayanan
ஜன 22, 2024 11:06

முதலில் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்ட குழுவினர் கேட்கும் அவர்களின் பிடித்துவைத்த தொகையான வெறும் ஏழு கோடியை வாங்கி அவர்களின் பிரச்னையை தீர்க்காமல் ஆட்சியாளர்களின் கொள்ளைக்கு தொன்னூற்று ஒரு கோடி வாங்கவேண்டுமா?


R KUMAR
ஜன 22, 2024 11:02

தமிழக போக்குவரத்து நிதி நிறுவனத்திடம் போதுமான நிதி இல்லையா? இல்லை நிர்ணய அளவுக்கு மேல் கடன் வாங்கியாகிவிட்டார்களா? போற போக்கில் பயணிகளிடம் உண்டியல் குலுக்கக்கூட போக்குவரத்து நிறுவனங்கள் தயாராக உள்ளன. அரசின் நிதி நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதென்று அனைவருக்கும் தெரியும்.


rasaa
ஜன 22, 2024 10:07

100 பஸ்சுக்கு 91கோடியா? அப்படியானால் 1 பஸ் 91 லட்சமா?


அப்புசாமி
ஜன 22, 2024 07:52

நாப்பது சதவீதம் 36 கோடி. மீதிக்காசுக்கு ஏதாவது ஒரு பரதேசி நிறுவனத்திடம் டெண்டர் விட்டு ஒரு வருஷத்தில் ஓட்டை ஒடைசலுக்கு போயிடும் பஸ்கள் வாங்கப்படும். திருட்டு திராவிட நிர்வாகம்.


Ramesh Sargam
ஜன 22, 2024 07:08

100 பஸ்கள் வாங்கல் 91 கோடியா? ஒரு பஸ் தயாரிக்கும் நிறுவனமே நிறுவிடலாமே...


தமிழ்வேள்
ஜன 22, 2024 14:29

குறைந்த பட்சம் 200 பஸ்களை வாங்கலாம் இந்த தொகைக்கு ..... பஸ் சேசிஸ் தயாரிப்பு நிறுவனங்களே பாடி கட்டி தரும் பொது செலவு குறையும் ..ஆனால் திருட்டு திராவிடம் கொள்ளையடிக்க முடியாது ..


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி