உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் சீமான்

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் வரும் 11ல், ஆர்.எஸ்.எஸ்., விஜில் அமைப்பு நடத்தும் நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்கிறார். 'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டு விழாவை, மத்திய அரசு கொண்டாடி வருகிறது. பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., அமைப்புகள், நாடு முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஆர்.எஸ்.எஸ்.,சின் பொது விவாத நிகழ்ச்சிகளை நடத்தும் அமைப்பான, 'விஜில்' சார்பில், சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில், வரும் 11ம் தேதி, 'பாரதி பிறந்த தினம் மற்றும் வந்தே மாதரம் 150வது ஆண்டு தினம்' விழா நடக்கிறது. 'பாரதி கண்ட பங்கிம் சந்திர சட்டர்ஜியின் வந்தே மாதரம்:- தமிழ் இளைஞர்களின் பார்வைக்கு' என்ற தலைப்பில் நடக்கும் இந்த விழாவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கவிஞர் வைரபாரதி ஆகியோர் பேசுகின்றனர். ஆர்.எஸ்.எஸ்., கொள்கைக்கு எதிராக, சீமான் பேசி வரும் நிலையில், ஆர்.எஸ்.எஸ்., விஜில் அமைப்பு நடத்தும் வந்தே மாதரம் விழாவில், சீமான் பங்கேற்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, 'விஜில்' அமைப்பின் பொறுப்பாளர் ஒருவர் கூறியதாவது:

'விஜில்' அமைப்பு, கடந்த 1981 முதல் செயல்படுகிறது. எதிர் சித்தாந்தம், எதிர் கருத்து கொண்டவர்களையும் அழைத்து, கருத்து பரிமாற்றம் நிகழ்த்துவதுதான், இந்த அமைப்பின் நோக்கம். கடந்த காலங்களில், 'விஜில்' நிகழ்ச்சிகளில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும், கம்யூனிஸ்ட் சிந்தனை கொண்டவர்களும் கலந்து கொண்டுள்ளனர். அந்த அடிப்படையில்தான், சீமானும் கலந்து கொள்கிறார். தமிழையும், தேசியத்தையும் இரு கண்களாக போற்றியவர் பாரதி. அதன்படி, 'பாரதி கண்ட வந்தே மாதரம்' என்ற தலைப்பில், சீமான் பேசுகிறார். மாற்றுக் கருத்துடையோர் யாராக இருந்தாலும், இது மாதிரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பினால், அவர்களும் கலந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Venugopal S
டிச 09, 2025 20:08

கட்டுச்சாத கூட்டையில் பெருச்சாளியை வைத்தது போல் ஆகி விடப் போகிறது!


Kannapiran Arjunan
டிச 09, 2025 14:02

சம்பளம் கொடுப்பது


ஆரூர் ரங்
டிச 09, 2025 12:55

துக்ளக் ஆண்டுவிழாவில் பல மாற்றுக் கருத்துள்ள கலந்து கொள்கிறார்கள். நல்ல முன்னெடுப்பு.


vbs manian
டிச 09, 2025 08:46

இவர் ஒரு கதம்ப விருந்து. ஆமைக்கறி காஷ்மீர் குல்கந்து கல்கட்டவின் ரசகுல்லா டெல்லியின் பானிபூரி மும்பை வடபாவு ஸ்ரீரங்கம் புளியோதரை எல்லாம் இருக்கும்.


bharathi
டிச 09, 2025 08:26

Rama Sreenivasan


S.V.Srinivasan
டிச 09, 2025 08:16

இவரு அங்க போய் எதாவது ஏடாகூடமா பேசிட போறாரு. ஏற்கனவே இவரு டென்ஷன் பார்ட்டி.


SRIDHAAR.R
டிச 09, 2025 07:39

பேராசிரியர் இராம சுப்ரமணியம் கலந்து கொண்டால் பட்டிமன்றம் சிறப்புஅடையும்


Mani . V
டிச 09, 2025 04:26

இந்த பைத்தியத்துக்கு ஒரு கொள்கையும் கிடையாது.


Kasimani Baskaran
டிச 09, 2025 04:09

தன்னை ஆசிரி[றி]யர் என்று சொல்லிக்கொள்ளும், தீம்க்காவுக்கு பகுத்தறிவை கற்ப்பித்த, ஓசி ஜந்துவையும் கூட அழைக்க வேண்டும். இவர்களின் தீவிரவாத பேச்சுகள் தீம்க்காவை மட்டுமல்லாது காங்கிரசையும் கூட ஒழித்துக்கட்ட வல்லது.


தலைவன்
டிச 09, 2025 10:06

கலிகாலம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை