உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்சி, அதிகாரம் நிரந்தரமல்ல: முதல்வரை எச்சரிக்கிறார் அண்ணாமலை

ஆட்சி, அதிகாரம் நிரந்தரமல்ல: முதல்வரை எச்சரிக்கிறார் அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' சமூக வலைத்தளப் பதிவுகளுக்காக, பா.ஜ.,வினரைக் கைது செய்யும் சிறுபிள்ளைத்தனத்தைத் தொடர்வது சரியல்ல. ஆட்சி, அதிகாரம் நிரந்தரமல்ல'' என முதல்வர் ஸ்டாலினை தமிழக முன்னாள் பா.ஜ., தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.அவரது அறிக்கை: சமூக வலைத்தளப் பதிவுக்காக, தமிழக பா.ஜ.,வைச் சார்ந்த பிரவீண் ராஜ் கைது செய்யப்பட்டிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் பெருகி வரும் போதைப் பொருள் புழக்கம், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தனியாக வசிக்கும் முதியோர்கள் கொலை செய்யப்படுவது என, சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள் ஆயிரம் இருக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nihvqyu8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால், தி.மு.க., அரசின் நிர்வாகத் தோல்விகள், சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி விடக்கூடாது என்பதற்காக, முழுநேரமாக தமிழக போலீசாரை, சமூக வலைதளங்களைக் கண்காணிக்க மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்க முதல்வர் ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா?https://x.com/annamalai_k/status/1940292729667559587பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ., தலைவர்கள், என அனைவரையும் தரக்குறைவாக விமர்சிக்கும் தி.மு.க.,வினர் மீது புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் ஸ்டாலின் அரசு, சாதாரண சமூக வலைத் தளப்பதிவுகளுக்காக, பா.ஜ.,வினரைக் கைது செய்யும் சிறுபிள்ளைத் தனத்தைத் தொடர்வது சரியல்ல. ஆட்சி, அதிகாரம் நிரந்தரமல்ல. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 03, 2025 00:47

மோடிக்கு எச்சரிக்கையா? இல்லை நைனாருக்கா?


திகழ்ஓவியன்
ஜூலை 02, 2025 22:51

ஒரு முன்னாள் முதல்வரை தற்குறி என்று மேடை போட்டு சொன்ன நீர் இதை எல்லாம் பேசலாமா , ஒன்றியத்தில் உங்கள் ஆட்சி இல்லை என்றால் இந்நேரம் நீர் இதை பேசுவீரா , எல்லாம் மேலே இருக்கிறவன் இருக்கும் தைரியம் தானே காரணம்


திகழ்ஓவியன்
ஜூலை 02, 2025 22:49

இவரை பதவியில் இருந்து தூக்கி அடித்த அமித் ஷா வை சொல்லுகிறாரோ , இல்லை மினாரிட்டி மோடி ஆட்சி நிரந்திரம் இல்லை எண்கிறாரோ


J.Isaac
ஜூலை 02, 2025 21:46

உலகில் எதுவுமே நிரந்தரம் அல்ல என்று அனைவரும் தெரிந்ததே. அதை தலை முதல் கால் வரை நினைப்பதே இல்லை. பிறர் நலம் பாராமல் சுயம் நலம் சார்ந்தே பெரிய பதவியில் இருப்பவர் முதல் சிறிய பதவியில் இருப்பவர் வரை செயல்படுகிறார்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 02, 2025 21:01

அண்ணாமலை, நீங்க பேசுறது அந்த கீ கொடுக்கப்பட்ட பொம்மைக்குப் புரியுமா ??


ramesh
ஜூலை 02, 2025 20:58

இதை தான் எல்லாரும் மத்திய அரசின் ஆட்சி அதிகாரம் நிரந்தரம் அல்ல என்று பொது மக்கள் சொல்லுகிறார்கள் . மத்திய அரசின் தைரியத்தால் தான் அனைத்து அரசியல் தலைவர்களையும் வாய்க்கு அந்த படி பேசிவந்தார் . அதனால் தான் எடப்பாடியால் பிஜேபி தலைவர்பதவியை இழந்து எந்த பதவியும் இல்லாத கட்சிக்காரராக மட்டும் இருக்கிறார் . இப்படி பேசும் அண்ணாமலையும் மத்தியில் உள்ள ஆட்சி அதிகாரம் நிரந்தரமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்


என்னத்த சொல்ல
ஜூலை 02, 2025 19:20

அரசியலை விமர்சிக்கலாம். கொள்கையை விமர்ச்சிக்கலாம், ஆட்சித்தின் தவறுகளை சுட்டி காட்டலாம். ஒருவரைமிக தரக்குறைவாக தனிப்பட்ட முறையில் விமர்ச்சிப்பதை அண்ணாமலை ஆதரிக்கிறாரா?


sridhar
ஜூலை 02, 2025 21:23

ஆண்டிமுத்து அமித் ஷாவை என்ன சொன்னான் . திருப்பி அடிச்சா வலிக்குதா ?


Mario
ஜூலை 02, 2025 19:03

ஆட்சி, அதிகாரம் நிரந்தரமல்ல: பிரதமரை எச்சரிக்கிறார் அண்ணாமலை


venugopal s
ஜூலை 02, 2025 18:38

மத்தியில் பாஜக ஆட்சி என்ற மமதையில் தான் தமிழக பாஜக தலைவர்கள் இங்கு இருக்கின்றனர் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும்!


vivek
ஜூலை 02, 2025 20:44

உங்க கும்பலை விரட்டப்படும் காலம் வந்துவிட்டது வேணுகோபால்


அப்பாவி
ஜூலை 02, 2025 18:19

ஐ.பி.எஸ் பதவியும் நிரந்தரமல்லங்கற மாதிரி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை