உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பா.ம.க., எம்.எல்.ஏ.,

மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பா.ம.க., எம்.எல்.ஏ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: சேலத்தில் சைக்கிள் வழங்கும் விழாவில் ஏற்பட்ட தாமதத்துக்கு பொறுப்பேற்று, மாணவ, மாணவிகள் காலில் விழுந்து பா.ம.க., எம்.எல்.ஏ., அருள் மன்னிப்பு கேட்டார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பாகல்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் பா.ம.க., எம்.எல்.ஏ., அருள் கலந்து கொண்டார். அதில் அப்பகுதியைச் சேர்ந்த தி.மு.க.,வினர் விழாவில் பேச அனுமதி வழங்காமல் சைக்கிள் கொடுக்க முயன்றனர். இதையடுத்து, தி.மு.க.,வினருடன் வாக்குவாதத்தில் அருள் ஈடுபட்டார். இதனால் விழாவில் ஏற்பட்ட தாமதத்துக்கு பொறுப்பேற்று, எம்.எல்.ஏ., அருள் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து மாணவ, மாணவியர் மத்தியில் மன்னிப்பு கேட்டதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை