உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா!

இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: நடிகை சமந்தா, தனது காதலனான ராஜ் நிடிமொருவை கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்கபைரவி கோவிலில் இன்று காலை எளிய முறையில் திருமணம் செய்து கொண்டார்.நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த சமந்தா, சில வருடங்களில் கருத்து வேறுபாடால் 2021ல் பிரிந்தார். பின்னர், நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபலாவை மறுமணம் செய்துகொண்டார். இதற்கிடையே தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் மீண்டு வந்த நடிகை சமந்தா, 'பேமிலி மேன், சிட்டாடல்: ஹனி பன்னி வெப் தொடர்களில் நடித்தார். அப்போது, அதன் இயக்குனர்களில் ஒருவரான ராஜ் நிடிமொருவுடன் சமந்தாவுக்கு நட்பு ஏற்பட்டது.இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. பொதுவெளியில் இருவரும் ஜோடியாக திரிவது, காதல் கிசுகிசுக்களை உண்மையாக்கின. சமீபத்தில் கூட இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் சமந்தா. ராஜ் நிடிமொருவும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். ஸ்யாமலி டே என்பவரை திருமணம் செய்து 2022ல் விவாகரத்து பெற்றிருந்தார். அதன்பிறகே சமந்தாவுடன் காதல் உதயமானது.இந்த தகவல் தெலுங்கு திரையுலகில் சில மாதங்களாக பேசப்பட்டு வந்த நிலையில், சமந்தா- ராஜ் ஜோடி, இன்று டிச.1) கோவை ஈஷா யோகா மையத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்க பைரவி ஆலயத்தில் இவர்களது திருமணம் எளிய முறையில் நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anand
டிச 01, 2025 14:26

சபாஷ், இதுபோல நாட்டின் வளர்ச்சி சம்பந்தமான செய்திகள் தான் இன்றைய இளம் சமுதாயம் வளம்பெற பெரிதும் உதவும்.


சந்திரன்
டிச 01, 2025 14:24

என்ன கருமம்டா சாமி


sankar
டிச 01, 2025 14:23

வாழ்த்துக்கள்


ANNADURAI MANI
டிச 01, 2025 14:09

இணை பிரியாது இருந்து இனி வரும் நாட்களில் · இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க · எல்லா வளங்களையும் பெற்று நலமுடன் வாழ ·


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை