உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநகராட்சியில் முறைகேடு : 20 பேருக்கு தொடர்பு?

மாநகராட்சியில் முறைகேடு : 20 பேருக்கு தொடர்பு?

மதுரை: மதுரை மாநகராட்சியில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டப்பணிகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. ஜூலை 12ல் மாநகராட்சி அலுவலகம் வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், விசாரணை நடத்தினர். உதவிப்பொறியாளர் உட்பட சிலர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு, பரிந்துரைத்தனர். இதுகுறித்து விசாரணை தொடர்கிறது. இதுவரை 20 பேர் திட்ட பணிகளில் முறைகேடு செய்ததாக சிக்கியுள்ளனர். அதிகாரிகள் மட்டுமின்றி, தி.மு.க.,வினருக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. மாநகராட்சி கமிஷனர் நடத்தி வரும் விசாரணையிலும், நிறைய பேர் சிக்கியுள்ளனர். அவர்கள் மீதான நடவடிக்கை குறித்து, விரைவில் அறிவிப்பு வெளிவரும். அதுவரை சம்மந்தப்பட்டவர்கள் குறித்து ரகசியம் காக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கமிஷனர் நடராஜன் கூறுகையில், ''லஞ்ச ஒழிப்பு விசாரணை முடியவில்லை. மாநகராட்சி சார்பிலும் தனியாக விசாரணை நடந்து வருகிறது. முறைகேடுகளில் இதுவரை 20 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ