வாசகர்கள் கருத்துகள் ( 24 )
மக்களின் வாழ்வாதாரத்துக்கே கஷ்டப்படுறாங்க இதுல சினிமா வேற
மக்கள் கையில் காசு குறைஞ்சுட்டு வருதுன்னு பொருள் காண்க. பொருளாதாரம் சூப்பரா வளர்ச்சி. நாமதான் வல்லரசு.
எத்தனை ஆயிரம்பேர் வாழ்வாதாரம் அழிந்தாலும் பரவாயில்லை...தமிழக சினிமாத்துறை அடியோடு அழியவேண்டும்.
அப்பாடி, வாழட்டும் மக்கள், குறையட்டும் சினிமா மோகம்.
கற்பழிப்பு, கொலை, கொள்ளை, பிறரை ஏமாற்றுவது , சொந்த பந்தங்களை வெறுப்பேற்றி சண்டை சச்சரவு செய்வ்து, காதல் கத்திரிக்காய் என்று இளம் பெண்களை வசியப்படுத்தி ஏமாற்றி வீட்டிற்கு தெரியாமல் ஓடிப்போய் கல்யாணம் செய்து கஷ்டப்படுவது எப்படி, இன்னபிற குற்றஙகள் செய்வது எப்படி என்றெல்லாம் கற்பித்து வில்லன்களை பாராட்டும் இப்படிப்பட்ட சமூக விரோத சினிமாக்களை பார்த்தாலென்ன, பார்க்காவிட்டாலென்ன? கோடி கோடியாக சம்பாதிக்கும் மாட மாளிகைகளில் சொகுசு வாழ்க்கை வாழும் இந்த சினிமாக்காரர்களால் மக்களுக்கோ மாநிலதிற்கோ நாட்டிற்கோ சொல்லிக்கொள்ளும் வகையில் ஏதாவது நன்மை உண்டா?
ஒரே காரணம் தான். சினிமா ரசிகர்கள் சாராய கடை ரசிகர்கள் ஆகி ரொம்ப வருஷம் ஆயிட்டுதே. ஒருத்தனால ரெண்டுக்கும் பணம் கொடுக்க முடியுமா? சாராயக் கடைய ஒழிச்சால் மட்டுமே சினிமா கடைத் தேறும். ஆனா ரெண்டையுமே ஒழித்து கட்டினால் நாடு உருப்படும். முன்னது உடல் நலத்துக்கு கேடு.பின்னது கலாசாரத்துக்கு கேடு.
இன்று பொழுது போக்கிற்காக பலவித விஷயங்கள் உள்ளன. கோவில்கள், பிரார்த்தனைக் கூடங்கள், கதாகாலட்சேபங்கள், திருவிழாக்கள், நாடகங்கள், சினிமாக்கள், கொண்டாட்டங்கள் என்று பல இருந்தன. தங்களது முழு நாட்களையோ, அல்லது நாளின் ஒரு பகுதியையோ அதற்காக மக்கள் சிலவழித்தனர். குடும்பம் குடும்பமாக சினிமா சென்ற காலங்கள் உண்டு. எல்லா பொழுது போக்குகளும் இப்போது கடந்து போய், செல்போன், ஓடிடி என்கிற பொழுது போக்கு அம்சங்கள் வந்த பிறகு ஐந்து நிமிடம் கிடைத்தாலும் தங்களது பொழுதினை கடத்தி விடுகிறார்கள். அலங்காரம் செய்து கொள்ள வேண்டாம், வீண் செலவாக எதையும் செய்ய வேண்டாம், டிக்கட் வாங்க வேண்டாம், பிராயணம் செய்ய வேண்டாம், கூட்டத்தில் நிற்க வேண்டாம், வரிசையில் நிற்க வேண்டாம். டிஷ் டிவிக்கள் செய்ய முடியாததை இந்த "ஒரு விரல் புரட்சி" புரட்டி போட்டு விட்டது. இதன் காரணமாக இன்று சினிமா உலகம் படுத்து விட்டது. சினிமா கொட்டகைகள் திணறுகின்றன. மாளிகைகளாக மாறுகின்றன, ஷாப்பிங் மால்களாக மாறுகின்றன. சென்னை உதயம் சினிமா தியேட்டரில் நடக்காத விழாக்களா ? இனி இது தான் வழி. ஓடிடியை இனி ஒதுக்க இயலாது. இதில் வெளியிடவே பல படங்களும், சீரியல்களும் வந்து விட்டன.
தமிழ் தயாரிப்பாளர்கள் பணத்தை எங்கிருந்து கொண்டு வருகிறார்கள் பணம் எங்கெல்லாம் செலவாகிறது என்பதை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும். ரூ 20,000 க்கு மேல் ரொக்கப் பணமாக கொடுக்கக்கூடாது என்று சட்டம் கூறுகிறது. இவர்களில் ஒருவர் கூட சட்டத்தை மதிக்கிறார்களா என்று தெரியவில்லை.
ஹிந்து தர்மம் கூறும் தார்மீக வாழ்வியல் சிந்தனைகள் கருத்துக்கள் ஆகியவற்றை தவறாக புரிந்து கொள்ளும் படியும் ஒழுக்கமற்ற தறுதலை தேசவிரோத வாழ்வியலை ஜனரஞ்சகமாக்கும் வகையிலும் விஷமத்தனமான படங்களை எடுத்து குவித்து நாட்டை கெடுக்கும் தமிழ் சினிமா சீந்துவாரின்றி அழிவை சந்திப்பது வரவேற்கத்தக்கது...திராவிடத்தால் உச்சத்துக்கு போன தமிழ் சினிமா இன்று அதே திராவிடத்தால் அதால பாதாளத்தில் அழுத்துகிறது.. வினை விதைத்த தமிழ் சினிமா வினையைத்தானே அறுவடை செய்ய இயலும்?
சொன்னாலும் சொல்லா விட்டாலும் தக் லைப் ..... நெட் பிளிக்ஸ் தற்போது முதலிடம்... உலக அளவில் ஐந்தாவது இடம்... உலக நாயகனுக்கு நிகர் அவர் மட்டுமே....
இந்த மாதிரி சமாதானம் எல்லாம் பெருமைக்கு எருமை தூக்கும் கதை தான். தியேட்டர்களில் ஒரு 200 நாட்கள்,100 நாட்கள் வரை ஓடுகிறதா என்பதே கேள்வி!!!