மேலும் செய்திகள்
நீச்சல் பயிற்சி முகாம்
18-Feb-2025
தியாகதுருகம் : தியாகதுருகம் மவுண்ட் பார்க் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கையில் 100 சதவீதம் கல்வி கட்டண சலுகை பெறுவதற்கான ஸ்காலர்ஷிப் தகுதி தேர்வு நடந்தது.மவுண்ட் பார்க் சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆண்டு தோறும் மாணவர்களின் தகுதி அடிப்படையில் பிளஸ் 1 சேர்க்கையில் 100 சதவீதம் கல்வி கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இதற்கான தகுதி தேர்வு நேற்று நடந்தது. தாளாளர் மணிமாறன் தலைமையில் முதல்வர் சுஜாதா முன்னிலையில் தேர்வுகள் நடத்தப்பட்டது.கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 220 மாணவர்கள் ஆர்வத்துடன் தேர்வில் பங்கேற்றனர். தேர்தல் பங்கேற்ற மாணவர்கள் வசதிக்காக பல்வேறு ஊர்களில் இருந்து இலவச பஸ் இயக்கப்பட்டது. அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.தகுதித் தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு கல்வி கட்டண சலுகை வழங்கப்பட உள்ளது.
18-Feb-2025