உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளி மாணவர்கள் சீருடை குவியலாக கிணற்றில் மீட்பு

பள்ளி மாணவர்கள் சீருடை குவியலாக கிணற்றில் மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை, :புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே அக்கச்சிப்பட்டி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கிணற்றில், 100க்கும் மேற்பட்ட பண்டல்களாக, 5,000க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் இருந்தன. இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.கந்தர்வக்கோட்டை போலீசார், கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற அதிகாரிகள், சீருடைகளை மீட்டனர். அவற்றை கிணற்றில் வீசியது யார் என, தெரியவில்லை. விசாரணை நடக்கிறது.

கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சீருடைகள், கடந்த, 2018- - 2019 கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கி இருக்க வேண்டியவை. பின், 2020ம் ஆண்டு பள்ளி சீருடை வண்ணம் மாற்றப்பட்டது.

தொடக்கக் கல்வி படிக்கும் மாணவ - மாணவியரின் சீருடைகள் தான் கிணற்றில் வீசப்பட்டுள்ளது. இதை யார் வீசியது என, விசாரணை நடத்தப்படும். அரசு விதிப்படி சீருடைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்யாமல் நான்கு ஆண்டுகளாக தங்கள் வசம் வைத்திருந்து, தற்போது அனுப்பினால் பிரச்னையாகும் எனக்கருதி, கிணற்றில் வீசி இருக்கலாம். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

D.Ambujavalli
பிப் 19, 2024 06:18

ஐயாயிரம். ஏழைக்குழந்தைகளின் சீருடைக்கனவு தகர்ந்திருக்கும் நல்ல கல்வி நிர்வாகம்


sridhar
பிப் 18, 2024 18:00

இன்னும் இரண்டு வருடம்… என்னென்ன சீர்கேடுகளை பார்க்கணுமோ .


அப்புசாமி
பிப் 18, 2024 10:57

ஹி..ஹி.. மொத்தமா அழுக்கு போக தோச்சி குடுக்கலாம்னு இருந்தோம். எந்த ஸ்கூல்.சீருடைன்னு தத்திகளுக்கு கண்டுபுடிக்கத் தெரியாதே... கண்டுபுடிச்சுட்டா திருட்டு திராவிடன் மாட்டிப்பானே...


rama adhavan
பிப் 18, 2024 10:24

மாவட்ட கல்வி அதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வு செய்ய ஏன் மறந்து விட்டனர்? ஆய்வு படிவத்தில் சீருடை பற்றி ஓரு கலம் சேர்த்து இருக்கலாம். இவர்களை யார் தண்டிப்பது?


RAMAKRISHNAN NATESAN
பிப் 18, 2024 08:59

காசுக்கும், சரக்குக்கும் வாக்களித்தால் இது போன்ற அவலங்கள் அன்றாட நிகழ்வாகும் .........


N Annamalai
பிப் 18, 2024 07:31

அக்கிரமம் .


Svs Yaadum oore
பிப் 18, 2024 07:13

5,000க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் இருந்தனவாம். இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தாராம் .... இந்த மத சார்பின்மை சமூக நீதி திராவிடனுங்க ஆட்சியில் மக்கள் வரிப்பணம் எப்படியெல்லாம் வீணாக போகிறது .... சமத்துவம் சகோதரத்துவம் சமூக நீதி ....தமிழ் தமிழன் தமிழன்டா .....


Kasimani Baskaran
பிப் 18, 2024 07:01

இல்லாதவர்கள் நாலு பேருக்கு கொடுத்திருந்தால் இதெல்லாம் வீணாகாமல் இருந்திருக்குமே..


குமரி குருவி
பிப் 18, 2024 06:34

அரசின் கடமையுணர்ச்சிஅபாரம்


Ramesh Sargam
பிப் 18, 2024 06:17

ஏதோ பெரிய ஊழல் நடந்திருக்கிறது. ஊழல் செய்தவர்களை கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்கவேண்டும். அவை அனைத்தும் மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்டவை என்பதை மக்களும் அறியவேண்டும்.


சிந்திப்பவன்
பிப் 18, 2024 06:31

என்னத்த, ஊழல், பண்ணி, கண்டு, புடிச்சு, தண்டிச்சு


Ramesh Sargam
பிப் 18, 2024 07:35

உங்கள் வேதனை எனக்கு நன்றாகவே புரிகிறது. நாம் என்னத்த செய்ய முடியும். விதி.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை