உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எத்தனை வழக்குகள் போட்டாலும் சோர்வடைய மாட்டேன்; சீமான் திட்டவட்டம்

எத்தனை வழக்குகள் போட்டாலும் சோர்வடைய மாட்டேன்; சீமான் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் சோர்வடைய மாட்டேன்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், சீமான் கூறியதாவது: ஈ.வெ.ரா., குறித்து நான் இகழ்ந்து பேசவில்லை, அவர் பேசியதை தான் கூறினேன். என் மீது எல்லா இடங்களிலும் வழக்கு பதிவு செய்து சோர்வடைய செய்ய அரசு முயற்சி செய்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0og61ppd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் சோர்வடைய மாட்டேன், அனைத்து வழக்குகளையும் சட்டப்படி சந்திப்பேன். யாருக்கு பயம்? இதுக்கெல்லாம் நான் பயப்படுறவன் கிடையாது. எதுவாக இருந்தாலும் எதிர்கொள்ளுவேன். ஒரே நீதிமன்றத்தில், ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். நாளை விக்கிரவாண்டிக்கு ஒரு வழக்கிற்கு செல்ல வேண்டும். ஒவ்வொரு வழக்காக எதிர்கொள்வேன். ஒரு ஆள் தான் இருக்கிறேன். ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, என்னை மாதிரி நான்கு, ஐந்து பேரை உருவாக்கி அனுப்ப முடியாது. என்னால் தான், அவர்களுக்கு நெருக்கடி. அதிகாரத்தில் இருப்பவர்கள் இது நிலையானது என்று நினைப்பது சிரிப்பாக இருக்கிறது. ஏதுவாக இருந்தாலும் எதிர்கொள்வேன். என்னை ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் அடைத்து, என்னை உறுதியாக நிற்க வைத்தது கருணாநிதி தான். இப்பொழுது எனக்கு படிப்பதற்கு நேரம் குறைவாக இருக்கிறது. சிறையில் அடைத்தால் இன்னும் நிறைய படிக்கலாம். அறிவை வளர்த்து கொள்ளலாம். இவ்வாறு சீமான் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

P. SRINIVASAN
பிப் 17, 2025 17:41

என்ன, நீ மானம்கெட்டவன்.. அரசியல் வேபாரி


Nallavan
பிப் 17, 2025 14:44

இந்த அரசு நீ படிப்பதற்காகவே சிறையில் தள்ளும், அங்கு போயாவது, பெரியார், அண்ணா , பாரதியார் , பாரதிதாசன், அம்பேத்கர், புத்தகத்தை வாங்கி படி, திருந்து , இல்ல திரும்பி வந்து இப்படியே காத்திக்கிட்டு இருந்தா அடுத்தது ட்ரீட்மெண்ட் தான்


Barakat Ali
பிப் 17, 2025 13:54

தமிழக வெற்றிக் கழகம் வந்ததால் அறிவாலயம் ஸ்பான்சர் செய்வதை நிறுத்திருச்சோ ????


Barakat Ali
பிப் 17, 2025 13:53

தெனாவெட்டா பேசிட்டேன்னு எங்கயாச்சும் பெங்களூரு அக்காவை மறுபடி கூப்டுரப் போறீங்க .... .


Anbu Raj
பிப் 17, 2025 13:35

உன் தலையில் எளிதிருக்கு அடிமையாகவே உனக்கு பழகிட்டு திருத்துவது ரொம்ப கஷ்டம்


V வைகுண்டேஸ்வரன்
பிப் 17, 2025 12:23

நிஜமாகவே சீமான் வெடிகுண்டு வீசினாலும் ஆச்சரியம் இல்லை. ஏன்னா சேர்க்கை அப்படி. இருந்தாலும், இவனால் ஒரு தேர்தலில் கூட, இடத்தில் கூட ஜெயிக்க முடியாது. இவன் திமுக வாக்குகளைப் பிரிக்கிறான் என்று முட்டாள்தனமாக நம்பி, ஒவ்வொரு தேர்தலின் போதும் இவனுக்கு காவடி எடுத்து காசும் கொடுக்கும் பாஜக தான் பாவம்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 17, 2025 12:19

சோர்வடைய மாட்டேன் என்கிறாரே தவிர, "வெடிகுண்டு வீசுவேன் என்றெல்லாம் உளறுவதை நிறுத்த வும் மாட்டான், திருந்தவும் மாட்டான். ஏனென்றால் இவனுக்குப் பின்னணியில் நாக்பூர் ஆர் எஸ் எஸ் இருக்கிறது. மறுக்க முடியாத connection. ஆதாரம் தான், இவன், பாஜக வினரே ஏற்காத எச் ராஜா வை பேரறிஞர் என்றது, பாண்டே வை அறிவாளி என்றது. அண்ணாமலை இவனோட செகரட்டரி ஆக மாறி, இவனோட உளறல்களுக்கு ஆதாரம் தேடி எடுத்து குடுத்தது, ஈரோடில் இவனுக்கு ஒட்டளிக்கச் சொல்லி பாஜக வாய்மொழி சுற்றறிக்கை விட்டது - இவை தான்.


manokaransubbia coimbatore
பிப் 17, 2025 13:04

200 ரூபிக்கு இந்த .....


velan ayyangar, Sydney
பிப் 17, 2025 19:54

டீம்க்காவுக்கு இவரு பீ டீம் என்பது உலகறிந்த உண்மை. தா வே கா, வீ சீ கா எல்லாமே பி டீம்.


madhes
பிப் 17, 2025 12:18

இப்படித்தான் தம்பி, நானும், சாவற்கரும், அந்தமான் சிறைல இருக்கும்போது, நாங்க ரெண்டுபேரும் நல்ல நண்பர்கள், ரெண்டுபேரும் சிட்டுக்குருவி லேகியம் சாப்பிட்டு சிட்டு குருவிபோல பார்ப்போம், புஹாஆஹாஆ


Ramesh Sargam
பிப் 17, 2025 11:58

எத்தனை வழக்குகள் போட்டாலும் சோர்வடைய மாட்டேன் சீமான் திட்டவட்டம். உண்மைதான் அவர் சோர்வடையமாட்டார். ஏன் என்றால் நமது நீதிமன்றங்களில் ஒரு வழக்கு முடிவுக்கு வருவதற்கு ஒரு ஆயுள் ஆகும். அப்படி இருக்கையில் ஒருவர் மீது ஒரு நூறு வழக்குகள் இருந்தால் அது என்றைக்கு முடிவுக்கு வரும்? அந்த தைரியத்தில்தான் இவர் பேசுகிறார். அதே தைரியத்தில்தான் இன்று பலர் பல குற்றங்களை தொடர்ந்து செய்கிறார்கள். கேஸ் போடுகிறாயா, போட்டுக்கோ என்று தெனாவட்டாக பேசுகிறார்கள். நீதிமன்றம் தங்கள் வழக்கும் விசாரிக்கும் முறையை மாற்றிக்கொள்ளவேண்டும். கேட்டபோதெல்லாம் ஜாமீன் கொடுத்தால் வழக்குகள் என்றைக்கு முடிவுக்கு வரும்? என்றைக்கு குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்? என்றைக்கு நியாயமானவர்களுக்கு நல்ல தீர்ப்பு வரும்.


ராமகிருஷ்ணன்
பிப் 17, 2025 11:58

அண்டாகாகசம், அபுகாஹுக்கும் திறந்திடு தீசே, வாயா அது வாயாலேயே 20 மாடி கட்டிடம் கட்டும் சீமாண்டி க்கு 100 கேஸ் இருந்தால் தான் பெருமை. வெக்கங்கெட்ட மானங்கெட்ட ஜென்மம்


Anbu Raj
பிப் 17, 2025 13:40

நல்லா .....


Anbu Raj
பிப் 17, 2025 13:41

உன் குற்றமல்ல தமிழர்களின் குற்றம் உன்னைமரி அலையெல்லாம் தமிழ் நாட்டுல வாழவிட்டது


புதிய வீடியோ