உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பள்ளிகளுக்கு விருது வழங்க தேர்வுக்குழு

அரசு பள்ளிகளுக்கு விருது வழங்க தேர்வுக்குழு

சென்னை:சிறந்த கட்டமைப்பு வசதியுள்ள அரசு பள்ளிகளுக்கு, பேராசிரியர் அன்பழகன் விருது வழங்க, தேர்வுக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் பள்ளிகளுக்கு, பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருது வழங்கப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.இதன்படி, மாவட்டந்தோறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி என, மொத்தம் நான்கு வகை பள்ளிகளை தேர்வு செய்ய, மாவட்ட, மாநில குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி பிறப்பித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை