உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செம்பை சங்கீத உற்ஸவம் பொன்விழா கொண்டாட்டம்; வரவேற்பு குழு அமைப்பு

செம்பை சங்கீத உற்ஸவம் பொன்விழா கொண்டாட்டம்; வரவேற்பு குழு அமைப்பு

பாலக்காடு:செம்பை சங்கீத உற்ஸவத்தின் பொன்விழா கொண்டாடுவதற்கான வரவேற்பு குழு, அமைக்கப்பட்டுள்ளது.கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற, குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், ஆண்டு தோறும், கார்த்திகை மாதம் ஏகாதசி திருவிழா நடக்கிறது. திருவிழாவை ஒட்டி, ஆண்டுதோறும் குருவாயூர் கோவிலில் செம்பை சங்கீத உற்ஸவம் நடப்பது வழக்கம். 50 ஆண்டுகள் காணும், செம்பை சங்கீத உற்ஸவத்தில், ஒரு ஆண்டு நடைபெறும் பொன்விழாவை கொண்டாடுவதற்காக வரவேற்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.ஆலத்துார் தொகுதி எம்.பி., ராதாகிருஷ்ணன், தலைமை பாதுகாவலரும் தரூர் தொகுதி எம்.எல்.ஏ.,யுமான சுமோத் என, 51 பேர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். பாலக்காடு மாவட்டம், கோட்டாயி செம்பை பார்த்தசாரதி கோவில் கலையரங்கில் நேற்று நடந்த வரவேற்பு குழு அமைப்பு நிகழ்ச்சியை, எம்.எல்.ஏ., சுமோத் துவக்கி வைத்தார்.குருவாயூர் கோவில் தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயன் தலைமை வகித்தார். குழல்மன்னம் வட்டார ஊராட்சித்தலைவர் சதீஷ், இசைக் கலைஞர்கள் சுகுமாரி நரேந்திர மேனன், காயத்ரி தம்பான், கதகளி நடன கலைஞர் சதனம் ஹரிகுமார், மிருதங்க வித்வான் குழல்மன்னம் ராமகிருஷ்ணன், செம்பை சுரேஷ் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.பொன்விழாவின் துவக்க விழா, ஆகஸ்ட் 17ல் பாலக்காட்டில் உள்ள செம்பை கிராமத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ