உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில் பாலாஜி வழக்கு: சாட்சி விசாரணையை தொடரலாம் என ஐகோர்ட் உத்தரவு

செந்தில் பாலாஜி வழக்கு: சாட்சி விசாரணையை தொடரலாம் என ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் சாட்சி விசாரணையை தொடரலாம்,' என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூனில் கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது. இதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து செந்தில் பாலாஜி தரப்பு மேல்முறையீடு செய்தது.இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆக.,21) நடைபெற்றபோது, 'செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு சாட்சி விசாரணை துவங்கியதாக' அமலாக்கத்துறை வாதிட்டது. இதனையடுத்து, 'செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் சாட்சி விசாரணையை தொடரலாம்,' என நீதிபதிகள் உத்தரவிட்டனர். செந்தில் பாலாஜி தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து விசாரணையை ஆக.,28க்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ramesh Sargam
ஆக 21, 2024 21:17

சாட்சி விசாரணை எவ்வளவு நாள் நடக்கும். மன்னிக்கவும் நொண்டும்.


raja
ஆக 21, 2024 18:54

இந்த ஒரு விசயத்தில் கேடுகெட்ட மாடல் ஆட்சி நடத்தும் விடியலை பாராட்டத் தான் வேண்டும் ...எடுத்த சபதத்தை முடித்து விட்டார்... கோவால் பிற திருடன் மனது வைத்திருந்தால் தங்க முடி, சாத்தூர் சாத்தான் போல் வெளி வந்திருக்கலாம்...


Kasimani Baskaran
ஆக 21, 2024 18:46

சாட்சிகளை கலைப்பது தீம்காவுக்கு எளிது. ஆனால் வங்கி ஆவணங்களை ஒன்றும் செய்ய முடியாததால் அமலாக்கத்துறைதான் முன்விரோதத்தை முன்னிட்டு தயாரித்து வழங்கியது என்று கூட சொல்ல வாய்ப்புண்டு.


Anand
ஆக 21, 2024 17:31

ஆயுசுக்கும் உள்ளே இருப்பது தான் இவனுக்கு நல்லது.


ராம்கி
ஆக 21, 2024 18:10

ஆம். வெளியே வந்தால் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு ஏற்பட்ட முடிவு வரலாம். செ.பா. உள்ளேயே இருப்பது அவருக்கு நல்லது.


அப்பாவி
ஆக 21, 2024 16:33

அடப்பாவிங்களா... அவர் கைதாகி ரெண்டு வருஷம் ஆகப் போகுதேடா. இன்னும் விசாரணையை தொடங்க நல்ல நாள் பாக்குறீங்களா? வெளங்கிடும்.


jaya
ஆக 22, 2024 10:33

உள்ளே இருப்பவனே ஒரு வருஷம் ஆச்சு என்று தான் சொல்கிறான் , தம்பி நீயோ இரண்டு வருஷம் என்கிறாய் , வாங்கின காசுக்கு வகை தொகை இல்லாமல் கூவுகிறாய்


Palanisamy Sekar
ஆக 21, 2024 16:14

நாணய வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டுவிட்டதால் இனி செந்தில் பாலாஜி வெளியே வந்திடுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு இதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. அமலாக்கத்துறையானது வேலைவெட்டி இல்லாத அமைப்பாக எண்ணியவர்களுக்கு விழுந்தது சம்மட்டி இடி. செந்தில் பாலாஜி தரப்புதான் வழக்கு விசாரணையை தள்ளிப்போட்டுக்கொண்டே செல்கின்றார்கள். செந்தில் பாலாஜி இப்போதைக்கு வருவதற்கு சந்தர்ப்பமே இல்லைபோலும்.


Vijay D Ratnam
ஆக 21, 2024 16:09

அதான் ஒங்க கள்ள உறவு ஜனங்களுக்கு வெட்டவெளிச்சம் ஆயிடுச்சில்ல. ஓ, கள்ள உறவுன்னு சொல்லக்கூடாதுல்ல


Vijay s
ஆக 21, 2024 15:33

உண்மை தான் சார். பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன நடக்கும் என்பதனை.


கூமூட்டை
ஆக 21, 2024 15:20

எல்லாம் வல்ல சுண்டல் செயல் ஊசிப்போன


ஆரூர் ரங்
ஆக 21, 2024 15:11

விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும். சாட்சிகளுக்கு பாதுகாப்பு தேவை. தி.மு.க முற்காலத்தில் செய்த லீலைகள் அப்படி.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை