உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை முடிக்க ஆறு மாதம் கெடு

சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை முடிக்க ஆறு மாதம் கெடு

சென்னை : சென்னை உயர் நீதிமன்றத்தில், யு டியூபர் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவில், 'சவுக்கு மீடியாவின் அன்றாட செயல்பாடுகளில் தலையிட, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருணுக்கு தடை விதிக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த, நீதிபதி பி.வேல்முருகன் பிறப்பித்த உத்தரவு: 'சவுக்கு மீடியா' செயல்பாடுகளில், மாநகர போலீஸ் கமிஷனர் தலையீடு உள்ளது என்பதற்கு ஆதாரம் இல்லை. எனவே, மனுதாரருக்கு எதிராக, நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளின் விசாரணையை முடித்து, நான்கு மாதங்களுக்குள் காவல் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை, விசாரணை நீதிமன்றங்கள், ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, சவுக்கு சங்கரின் மனுவை தள்ளுபடி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை