உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகளாம்: சொல்கிறார் சீமான்

நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகளாம்: சொல்கிறார் சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : '' போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் குற்றவாளிகளா? அப்பாவிகள். இரண்டு பேரை கைது செய்ததினால் பேசுகிறீர்கள். இல்லை என்றால் விற்பனை தொடர்ந்து இருக்கும்,'' என நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறினார்.மதுரையில் நிருபர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: ஒரு இனக்கூட்டம் 2 ஏக்கரில் மட்டும் வாழ்ந்து இருக்குமா? ஆயிரம், 500, 300 ஏக்கரில் கூடி தான் வாழ்ந்து இருப்பார்கள்.பிறகு கீழடியில் 2 ஏக்கர் மட்டும் தோண்டிவிட்டு ஏன் மூடினீர்கள் . மிச்சம் ஏக்கரை தோண்டுவதில் என்ன பிரச்னை ? https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bfc0n9x0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழரின் தொன்மம், வரலாற்று அடையாளங்கள், பெருமை உலகத்துக்கு வந்துவிடும் என்பதே காரணம். இன்னும் ஹராப்பா, மொகாஞ்சதாரோ பேசிக் கொண்டுஇருக்கிறோம். இதனை தோண்டினால் தமிழரின் பெருமை தெரிந்து விடும். ஆதிச்சநல்லூரில் தோண்ட மாட்டீர்கள். மற்ற இடங்களை தோண்ட சொன்னால், செய்ய மாட்டீர்கள்.கீழடியில் தோண்டி எடுத்ததை பெங்களூருவுக்கு கொண்டு சென்றது ஏன்? இங்கு வைக்க மாட்டார்கள். தமிழரின் பெருமை தெரிந்துவிடும்.தமிழ் பண்பாடு, தமிழரின் பண்பாடு ஏன் என சொல்ல மறுக்கின்றீர்கள்.எந்த பெருமையும் தமிழனுக்கு இருந்துவிடக்கூடாது என நினைக்கிறார்கள். எதுவும் இருந்துவிடக்கூடாது. இன்று தான் தெரிகிறதா கீழடி தமிழரின் தாய்மடி என்று.விடுதலைக்கு போராடி இறந்தவர்களுக்கு அடையாளம் ஏதும் உள்ளதா? திட்டமிட்டு மறைக்கிறார்கள் என தெரிகிறது.கள்ளச்சாராயம் குடித்து இறந்தவனுக்கு ரூ. 10 லட்சம் கொடுக்கிறார்கள். சாராய ஆலை வைத்து இருக்கும் முதலாளி எப்பபை கள்ளை மது என எப்படி சொல்லாம். இந்தியா முழுவதும் கள் விற்க அனுமதி உள்ளது. தமிழகத்தில் மட்டும் தடை ஏன்? மது விற்பனை பாதிக்கப்படக்கூடும் என்பதால் தடை செய்கிறார்கள்.நடிகர்கள் ஸ்ரீகாந்த் கிருஷ்ணாவும் தான் போதைப்பொருள் விற்றனரா? வேறு யாரும் பயன்படுத்தவில்லையா?இந்தியா முழுவதும் போதைப்பொருள் கலாசாரம் இருக்கிறது. பயன்படுத்திய இரண்டு பேரை கைது செய்துள்ளீர்கள். விற்றவர்கள் எங்கே ? காட்டுக்குள் இருந்த வீரப்பனை கடத்தல்காரன் என கூறுவீர்கள். விற்றவர் காட்டுக்குள் இருந்தார். வாங்கியவர்கள் எங்கே இருந்தான்? வாங்கியவன் யாரை கைது செய்தீர்கள்? ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் குற்றவாளிகளா? அப்பாவிகள். இரண்டு பேரை கைது செய்ததினால் பேசுகிறீர்கள். இல்லை என்றால் விற்பனை தொடர்ந்து இருக்கும். விற்கும்போது உடனே கைது செய்து விட்டீர்களா ?விற்றவர் யார்? ஸ்ரீகாந்த்துக்கு போதைப்பொருள் விற்றவர் அ.தி.மு.க.,வை சேர்ந்தவர் என்பதினால் திருப்புகிறீர்கள். தி.மு.க.,காரனுக்கும் போதைப்பொருள் விற்பனைக்கும் எந்த தொடர்பும் இல்லையா? குற்றவாளி யார்? விற்பனை செய்பவன் யார்? என பார்த்து கைது செய்ய வேண்டும். கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதால் போதைப்பொருள் விற்பனை நின்று விடுமா?, தடுக்கப்படுமா?அப்பாவி பலியாயிட்டான் அவ்வளவு தான். இரண்டு பேரை தவிர வேறு யாரும் பயன்படுத்தவில்லையா?. போதைப்பொருள் விற்பனை குறித்து பாடகி சுசித்ரா கூறியுள்ளார். இந்த கலாசாரத்தை உருவாக்கியவர்கள் ஆட்சியாளர்கள் தான்.சாராயம் விற்கும் அரசு கொக்கைன் விற்பனை கைது செய்கிறது.குடிக்க போகும் போது காரில் செல்லாம். வரும் போது கைது செய்துவிடும் அளவுக்கு ஆட்சி முறை உள்ளது.குடித்துவிட்டு கார் ஓட்டக்கூடாது. குடித்தவிட்டு கார் ஓட்டலாம்.ஒருத்தனும் கேள்வி கேட்க்கூடாது. ஒருத்தனும் பேசக்கூடாது.இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ராமகிருஷ்ணன்
ஜூன் 29, 2025 08:07

இவனே மொடா போதைக்காரன் சக போதைக்காரர்களை சப்போர்ட் பன்னாமல் வேறென்ன செய்வான்.


Arumugam
ஜூன் 29, 2025 00:27

அது என்னங்க விக்கிறவனை விட்டுட்டு.... சாப்பிட்ட வனை.... புடிக்கிறீங்க.... விற்கிறது யாருன்னு தெரியாதா.... இதெல்லாம் நம்புகிறபடியா இருக்கு... தமிழ்நாட்டில் இவர்கள் இரண்டு பேர் மட்டும்தான்.... யூஸ் பண்ணாங்களா.....


திகழ்ஓவியன்
ஜூன் 28, 2025 22:00

இவருக்கு பயம் அந்த காலத்தில் ஸ்ரீலங்கா வில் இருந்து அபின் கடத்தி தான் பெரிய ஆள் ஆனவர் அன்று இவரை விட்டது இப்படி பேச வைக்குது


Nanda Kumar
ஜூன் 28, 2025 21:26

This man Seeman is a waste piece. Sometimes he talks sensible. Most of the time his talk is IRRESPONSIBLE. His knowledge has become a waste for his UTTERLY SELFISH REASONS. He will never win at anytime...


Santhakumar Srinivasalu
ஜூன் 28, 2025 21:22

இவரை போய் ஜாமீன் கொடுத்து காப்பாற்ற சொல்லுங்க!


B N VISWANATHAN
ஜூன் 28, 2025 21:18

பாவம் இவரே ஒரு அப்பாவி. இல்லேன்னா நடிகை விஜயலட்சுமி இவர் மீது அபாண்டமாக பழி போட்டு ...வாங்கலா


Svs Yaadum oore
ஜூன் 28, 2025 20:39

கார்பொரேட் சாராய கம்பெனி நடத்தறவன் எல்லாம் விடியல் மந்திரியானால் இப்படித்தான் நடக்கும் .....ஊரெங்கும் கள்ள சாராயம் போதை கஞ்சா மெத்து ...மக்களுக்கு இதெல்லாம் புரியாமல் தெரியாமல் பார்த்துக்கொள்வதுதான் விடியல் ...அதற்கு துணை போவது விடியல் மதம் மாற்றும் மிஷனரி நெறியாளனுங்க கும்பல் கூட்டம் ....


Svs Yaadum oore
ஜூன் 28, 2025 20:36

போதைப்பொருள் விற்பனை குறித்து பாடகி சுசித்ரா கூறியுள்ளார்....அவர் வெளிப்படையாக நேரடியாகத்தானே எவன் போதை பொருள் கொடுத்தது பற்றி பேசியுள்ளார் ...அவரையே சாட்சியாக வைத்து கொடுத்தவனை கைது செய்யுமா விடியல் ??......அதை செய்யாது ..அவனுக்கு ராஜ்ய உறுப்பினர் பதவி கொடுத்தது விடியல் ...இந்த விடியல்தான் ரொம்ப யோக்கியன் மாதிரி சமூக நீதி மத சார்பின்மை பேசுவது .......கார்பொரேட் சாராய கம்பெனி நடத்தறவன் எல்லாம் விடியல் மந்திரியானால் இபப்டித்தான் நடக்கும் ....


குடிகுமார்
ஜூன் 28, 2025 20:35

இங்கே டாஸ்மாக் குடிகாரர்கள்தான் அப்பாவிகள்.


தமிழ்வேள்
ஜூன் 28, 2025 20:22

ஜின்னவர்ரு மீது நடவடிக்கை எடுக்கோணும்னு சுத்தி வளைச்சு சொல்ல வர்றாரு தல.....நீ பேசு தல..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை