18.10 கோடி ரூபாயில் விளையாட்டரங்கம் மேம்பாடு
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில், பல்நோக்கு விளையாட்டரங்கம் அமைக்கவும், புதுக்கோட்டை பல்நோக்கு உள் விளையாட்டரங்கை மேம்படுத்தவும், துணை முதல்வர் உதயநிதி, தலைமைச் செயலகத்தில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே அடிக்கல் நாட்டினார்இப்பணிகள், 18.10 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட உள்ளன.