உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செல்வச்செழிப்பில் வாழ்ந்தவர் ஸ்டாலின் நான் கஷ்டப்பட்டவன்:பழனிசாமி

செல்வச்செழிப்பில் வாழ்ந்தவர் ஸ்டாலின் நான் கஷ்டப்பட்டவன்:பழனிசாமி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மயிலாடுதுறை :எனது அடையாளம் விவசாயி. நான் வந்த பாதை வேறு ஸ்டாலின் வந்த பாதை வேறு அவர் செல்வச்செழிப்பில் வாழ்ந்தவர் நான் கஷ்டப்பட்டவன் என மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் பாவுவை ஆதரித்து பேசிய பழனிசாமி கூறினார். மேலும் அவர் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் தொழிற்சாலைகளை கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்தது.பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து டெல்டா பகுதியை பாதுகாத்தது அ.திமு.க தான். கையில் மண்வெட்டி பிடித்து இப்பவும் விவசாயம் செய்து வருகிறேன். திமுக அழுத்தம் கொடுக்க தவறியதால் கர்நாடகா காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்கவில்லை. மீத்தேன், ஹை ட்ரோ திட்டங்களுக்கு கையெழுத்து போட்டது திமுக. அதனை தடுத்தது அதிமுக .காவிரி விவகாரத்தில் விவசாயிகளுக்காக பார்லியை 22 நாட்கள் முடக்கியது அ.தி.மு.க., .ஸ்டாலினால் தமிழகத்தையே காப்பாற்ற முடியவில்லை தமிழகத்தையே ஒழுங்காக காப்பாற்ற முடியாத ஸ்டாலின் இந்தியாவை காப்பாற்ற போகிறாராம். ராகுல் பிரதமர் ஆவார் என ஸ்டாலின் சொன்னார் அவரது எதிர்கட்சி தலைவர் பதவி பறிபோனது

அதிமுகவிற்கு ஆதரவாக கவர்னர் இல்லை

மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்கியது அதிமுக தான். எங்கள் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டுகிறது. திமுக அரசு மீது கவர்னரிடம் அளித்த புகார் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லை.கருத்து வேறுபாடுகள் கொண்ட இண்டியா கூட்டணியால் எப்படி நிலையான ஆட்சியை தர முடியும். விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை கொண்டு வந்தது அ.தி.மு.க.,மக்கள் மீது அக்கறை இல்லாத முதல்வர் தமிழ்நாட்டை ஆட்சி செய்கிறார் முதல்வருக்கு டெல்டா விவசாயிகளை பற்றி கவலையில்லை, அவருக்கு தேவையெல்லாம் ஆட்சி அதிகாரம் தான். முதல்வரை நம்பி வாக்களித்தால் ஆண்டவனால் கூட தமிழ்நாட்டை காப்பாற்றமுடியாது. பா.ஜ. மோடியை பார்த்து எங்களுக்கு பயம் இல்லை யாரை கண்டும் எங்களுக்கு பயமில்லை. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

மணியன்
ஏப் 01, 2024 07:07

தொடர்ந்து துரோகம். நாலரை பதவியை பாஜக ஆதரவுடன் அனுபவித்து விட்டு இப்போது சிறுபான்மை பாசத்தில். எல்லாவற்றையும்விட பங்காளி ஒற்றுமை என்று பிரிவினைவாதிகளை ஆதரிக்கும் தேசதுரோகம்.இனி தப்பவே முடியாதுங்க பழனிசாமி அண்ணோவ்.


ராமகிருஷ்ணன்
ஏப் 01, 2024 06:31

அப்படி சொல்வதை விட ஸ்டாலின் பரம்பரை ஊழல்களின் காசில் வளர்ந்தவர், நான் என்னுடைய ஊழல் காசில் வளர்ந்தவன் என்று சொன்னால் சரியா இருக்கும்.


முருகன்
மார் 31, 2024 22:13

நீங்கள் பட்ட கஷ்டம் நாடு அறியும்


மோகனசுந்தரம்
மார் 31, 2024 21:16

பாவம் பழனி, கையில் பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்.


somasundaram alagiasundaram
மார் 31, 2024 20:26

இவ்வளவு எல்லாம் பேசுகிறார் இவர்களுக்கு யார் பிரதமர் அதை சொல்ல வில்லை


Pandianpillai Pandi
மார் 31, 2024 20:12

கலைஞரின் அக்னிபரிட்சையில் முதல் மாணவராக தி மு க வில் வலம் வந்தவர் மிசா கொடுமைகளை அனுபவித்தவர் ஜனநாயகப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இப்படி தி மு க தொண்டர்கள் பெருமைகொள்ளும் அளவிற்கு அவர் செயல்பாடுகள் மக்களுக்காக மட்டுமே என்றைக்கும் இருக்கிறது ஆனால் நீங்கள் கூவாத்தூரில் காலில் விழுந்து முதல்வரானவர் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் அ தி மு கவை எப்படி கபளீகரம் செய்தீர்கள் என்று மக்கள் அறிவர் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்தவர் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைவர் அவர்கள் ஆட்சியில் கிராமங்கள் தோறும் இன்றும் ஏரி கண்மாய்களில் தண்ணீர் இருக்கிறது எங்கு பார்த்தாலும் பசுமை காட்சியளிக்கிறது கிராமங்களில் இரட்டலை மங்கிவிட்டது கிராமங்கள் தோறும் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் என்ன சொல்கிறார் என்பதை மட்டுமே கேட்கும் அளவிற்கு காலம் மாறிவிட்டது அ தி மு க வின் பொய் புரட்டுகள் மக்களுக்கு நன்றாக தெரிந்துவிட்டது


Pugazh
மார் 31, 2024 20:04

நீங்கள் கஷ்டபட்டீர்கள் சரி. இப்பொழுது உஙகளிடம் எவ்வளவு சொத்துஉள்ளது?அது எப்படிவந்தது?


பேசும் தமிழன்
மார் 31, 2024 19:54

உங்கள் பங்காளியை பற்றி அப்படி கூறாதீர்கள்.... ஆமாம் இவ்வளவு நாட்கள் எங்கே போய் இருந்தீர்கள்.... எதிர்கட்சி வேலையை பிஜெபி கட்சி அண்ணாமலை அவர்கள் தானே செய்தார்..... இனியும். ஆனால் எதிர்கட்சி வேலையை அவரே பார்த்துக்கொள்வார்..... நீங்கள் எப்போதும் போல ரெஸ்ட் எடுக்கலாம்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி