உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புயல், மழையால் கடலுார் முதல் சென்னை வரை...ஸ்தம்பித்தது

புயல், மழையால் கடலுார் முதல் சென்னை வரை...ஸ்தம்பித்தது

சென்ன : வங்கக்கடலில் உருவான புயல் மற்றும் மழையால், கடலுார் முதல் சென்னை வரை மக்களின் அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்தது. சென்னையில் மழை வெள்ளம் சூழ்ந்ததால், வீதிகள் வெள்ளக்காடாக மாறின; பஸ், ரயில் போக்குவரத்து முடங்கியது, விமான நிலையம் மூடப்பட்டது. வங்கக்கடலில் உருவாகி, வடமேற்கு திசையில் நகர்ந்து வந்த, 'பெஞ்சல்' புயல், நேற்று மேற்கு திசையில் நகர துவங்கியதால், எதிர்பார்த்தபடி கரையை கடப்பதில் தாமதம் ஏற்பட்டது. மாலை 5:30 மணிக்கு புதுச்சேரி அருகே புயல் கரை கடக்க துவங்கியது.

விடுமுறை

இப்புயலால், நேற்று முன்தினம் முதல் கடலோர மாவட்டங்களில், கனமழை பெய்தது; காற்றின் வேகமும் அதிகமாக இருந்தது. எட்டு மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. தனியார் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை, வீடுகளில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தின. மக்கள் வீடுகளில் முடங்கினர்.

சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், நேற்று முன்தினம் இரவு துவங்கிய கனமழை, நேற்றும் தொடர்ந்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி, வெள்ளக்காடாக மாறின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மழை மற்றும் பலத்த காற்று காரணமாக, ரன்வேயில் நீர் தேங்கியதால், சென்னை விமான நிலையம் மூடப்பட்டது; விமானங்கள் இயக்கப்படவில்லை. ரயில், பஸ்களின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. டிரைவர்கள் வராததால், குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்பட்டன. சில இடங்களில் பஸ்கள் பள்ளத்தில் சிக்கியதை காரணம் காட்டி, பணிமனைக்கு வந்த டிரைவர்கள் பஸ்களை எடுக்க மறுத்தனர். அதிகாரிகள் நீண்ட நேரம் பேச்சு நடத்திய பிறகே, பஸ்கள் இயங்கின. பெரும் செலவில் மழை நீர் வடிகால்வாய், பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் பணிகள் செய்துள்ளதால், நகரில் எங்குமே தண்ணீர் தேங்காது என அமைச்சர்களும், அதிகாரிகளும் கூறி வந்தனர்.

பலன் இல்லை

அதை முற்றிலும் மறுக்கும் வகையில், நகரில் ஏராளமான பகுதிகளில், சாலைகள் நீரில் மூழ்கின. அண்ணா சாலை, ஓ.எம்.ஆர் சாலை, ஜி.எஸ்.டி., சாலை போன்ற அகலமான சாலைகளிலும் தரை தெரியாத அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது.நகரம் முழுதும் மோட்டார் வைத்து குழாய்கள் வழியாக தண்ணீரை உறிஞ்சி அகற்றும் பணி நடப்பதை பார்க்க முடிந்தது. ஆனால், உறிஞ்சிய தண்ணீரை சாலையின் மறுபக்கமே விட்டதால், எந்த பலனும் இல்லாமல் போனதை மக்கள் பார்த்தனர். வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளிலும், மழை நீரை வெளியேற்றும் முயற்சியில் இதே பிரச்னை தெரிந்தது. வடிகால்கள் ஏற்கனவே நிரம்பி செல்வதால், மோட்டார் வைத்து உறிஞ்சும் நீரை விடுவதற்கு இடமில்லை. 'ஆக்கிரமிப்புகள் அடியோடு ஒழிக்கப்படும் வரையில், வடிகால் மற்றும் சாக்கடை அடைப்புகள் தொடரத்தான் செய்யும். மழை நீர் செல்ல வழியே இல்லை' என, ஒரு சில அதிகாரிகள் விரக்தியுடன் குறிப்பிட்டனர். வெளியூர்களில் விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்த டிராக்டர்களை எல்லாம், சென்னை மாநகராட்சி தேவைக்காக வரவழைத்தும், தண்ணீர் தேங்கும் பிரச்னையை தீர்க்க முடியாமல் போனதற்கு அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். இன்றும் மழை தொடர்ந்தால், பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.இந்த சூழ்நிலையில், கடலோர மாவட்டங்களுக்கு, மேலும் ஒரு நாள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை சென்னைக்கு, 110 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரிக்கு, 120 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது. பின்னர் அது, வடமேற்கு திசையில் இருந்து விலகி, மேற்கு திசையில் நகர துவங்கியது. மாமல்லபுரம் - காரைக்கால் இடையே, நேற்று மாலை கரையை கடக்ககூடும் என, கணிக்கப்பட்டது. அதன்படி, மாலை ஐந்தரை மணி தாண்டியதும், புதுச்சேரி அருகே புயல் கரை கடக்க துவங்கியது என, வானிலை மையம் ஏழு மணிக்கு தெரிவித்தது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில், 21 செ.மீ.,க்கு மேல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்பகுதிகளுக்கு, 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலுார், அரியலுார், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்று, 20 செ.மீ., வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருப்பத்துார், கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில், 12 செ.மீ., வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் நாளை மிக கன மழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை மாவட்டங்களில், கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.புயல் கரையை கடந்தாலும், தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரத்தில் இன்றும், நாளையும் மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என, வானிலை மையம் கூறியுள்ளது.

20 கிராமங்கள் துண்டிப்பு

மரக்காணம் பகுதியில், மூன்று இடங்களில் சாலை துண்டிக்கப்பட்டு, 20 கிராமங்களுக்கு போக்குவரத்து முடங்கியது.பகிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அனுமந்தையில் இருந்து வண்டிப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள கழுவெளி ஏரியில் வெள்ளம் அதிகரித்தது.இதனால், 10க்கு மேற்பட்ட கிராம மக்கள் மரக்காணம் வழியாக, 15 கி.மீ., துாரம் சுற்றி புதுச்சேரி செல்கின்றனர். இந்த வழியாக, அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மரக்காணம் அடுத்த கானிமேட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி, இரு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஓங்கூர் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அங்கு போடப்பட்ட தற்காலிக சாலை நீரில் மூழ்கியது. இதனால், ஐந்து கிராம மக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். அதேபோல், சொரப்பட்டு கிராமத்தில் இருந்து, ஆடவல்லிக்கூத்தான் கிராமம் செல்லும் வழியில் மேம்பாலம் கட்டும் பணியும் கிடப்பில் போடப்பட்டதால், அங்கு அமைத்த தற்காலிக சாலையும் வெள்ளத்தில் மூழ்கியது.சொரப்பட்டு, வங்காரம் உட்பட, ஐந்து கிராம மக்கள், 10 கி.மீ., துாரம் சுற்றி, திண்டிவனம், மரக்காணம் செல்கின்றனர்.

28 கிராமங்களில் கடல் சீற்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையாறு உள்ளிட்ட, 28 கடலோர கிராமங்களில், கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. சின்னங்குடி உள்ளிட்ட சில கிராமங்களில் கரையைக் கடந்து, கடல் நீர் உப்பு புகுந்ததால், மீனவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். தரங்கம்பாடியில் கடல் அலைகள் டேனிஷ் கோட்டை பாதுகாப்பு சுவரை தாக்கிய நிலையில், சுற்றுலா பயணியரை போலீசார் திருப்பி அனுப்பினர். மீனவர்கள் 9வது நாளாக நேற்றும் கடலுக்கு செல்லவில்லை.

கரையை கடக்க பல மணி நேரம்

புயல் கரையை கடக்கும் நிகழ்வு முழுமையாக முடிய, நான்கு முதல் ஆறு மணி நேரமாகலாம். கடலில் இருக்கும் போது இதன் சுற்றளவு, 10 கி.மீ., வரை பரவி இருக்கும் என்பதால், முழுமையாக கரையை கடப்பதில் தாமதம் ஏற்படுவது வழக்கம். புயலை சுற்றி இருக்கும் மேக கூட்டங்களின் அடர்த்தி அடிப்படையில், மழை பொழிவு அதிகரிக்கும் அல்லது குறையும். மேக அடர்த்தி குறையும் போது மழை குறைந்து விடும். சென்னை நுங்கம்பாக்கத்தில், நேற்று காலை நிலவரப்படி, தரைக்காற்று வேகம் மணிக்கு, 50 கி.மீ., ஆக பதிவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

வைகுண்டேஸ்வரன்
டிச 01, 2024 21:33

நானும் நண்பர்களும் நினைத்த படி, பாதிக்கப்பட்டு தவிக்கும் விழுப்புரம் மக்களுக்கு 100 பேக்கட் பால், 100 பிரெட், கேம்ப் பணியாளர்கள் மூலம் கொடுத்து விட்டு வந்தோம். இங்கே திமுக அரசை திட்டுகிறவர்கள் கொஞ்சம் அந்த பக்கம் புதுச்சேரி பார்த்து அங்கு ஆட்சியில் இருக்கும் பாஜக கூட்டணி அரசையும் விமர்சிக்க வேண்டும். முடியுமா?? புதுவை மக்களைக் காப்பாற்ற தமிழ்நாட்டிலிருந்து தான் போகிறோம்.


Constitutional Goons
டிச 01, 2024 18:30

இதைவிட குறைவான மழை பெய்த போதும் கொல்கட்டாவிலிருந்து பூரிவரை இதைவிட மோசமாகத்தான் இருந்தது.


Constitutional Goons
டிச 01, 2024 18:25

இதைவிட அதிகம் செலவழித்த குஜராத்திலும், டெல்லியிலும், மும்பையிலும், அமெரிக்காவிலும், சிங்கப்பூர் மலேசியாவிலும் இதைவிட மோசமாகத்தான் இருந்தது. அப்போதெல்லாம் மகுடம் தூக்கியவர்கள் இப்போது ஒப்பாரி வைப்பது ஏன் ?


வைகுண்டேஸ்வரன்
டிச 01, 2024 13:12

புலம்பல் கொஞ்சம் ஓவரா இருக்கே


hari
டிச 01, 2024 15:16

உணகென்னபா 200 ரூபாய் கிடைச்சா போதும்...சென்னை மக்கள் கஷ்டம் தெரியுமா...


M Ramachandran
டிச 01, 2024 10:36

வேளச்சேரிமக்கள் புத்திசாலிகள். யாரை நம்பி நான் பொறன்தேன் போங்காடா போங்க என்று முன்பேயே போட்டி படுக்கையுடன் சொந்த பந்தஙகள் வீட்டிற்கோ சொந்த ஊருக்கோ சென்று விட்டனர். பாவம் T நகர் மாமாம்பழம் மற்றும் நகரின் மத்திய பகுதியில் உள்ளவர்களுக்கு வழி புலப்படாமல் தங்கி வரும் இடர்களை தாங்கி கொண்டு உள்ளனர். அவர்களுக்கு நம் ஆழந்த அனுதாபங்களை தான் கூற முடியும்.


M Ramachandran
டிச 01, 2024 10:26

ஆஹா அரசு அமைய தேர்ந்தெடுத்த மாக்களுக்கு நன்றி. இது போல் எப்போதும் வருட வருடம் ரயில் வருவது போன்று அது பாட்டுக்கு புயல் வெள்ளம் வந்து போகும் நாம். அமைச்சர்கள் சொல்வதை கேட்டு நாம் தலையை ஆட்டுவோம்


vbs manian
டிச 01, 2024 09:52

திரும்ப திரும்ப மழை சென்னையை உலுக்கி எடுக்கிறது. நாலாயிரம் ஐயாயிரம் கோடி செலவு என்று கணக்கு காட்டப்படுகிறது. மக்கள் பார்த்து கொண்டு திரும்பவும் இந்த வெற்றிகரமான அரசுக்கே வோட்டு போடுவார்கள். வாழ்க தமிழ் நாடு.


நிக்கோல்தாம்சன்
டிச 01, 2024 09:40

எப்பொழுது பேரிடர் வந்தாலும் பொதுமக்களே திரண்டு சரி செய்து கொள்கிறார்கள், ஆளும் அரசும், ஊடகத்தை கையில் வைத்திருக்கும் கட்சியும் இதனை வைத்து காசு பார்ப்பது எப்படி என்று தான் அலையும், இப்போது லிப்ஸ்டிக் போட்டு அழகு படுத்துவதை அரசு செய்தால் அவர்களுக்கு வீட்டில் உட்காருங்கள் ன்று பொதுமக்கள் சொல்லும் காலம் தொலைவில் இல்லை


xyzabc
டிச 01, 2024 07:58

தி மு க காரர்கள் மழையே இல்லை என்று சத்தியம் செய்வார்கள். பாதாள குழிகள், வடிகால் failure ஆனது பற்றி பேச கூடாது. கிடைத்த பணம் செலவு ஆகி விட்டது. கணக்கு கேட்பது திராவிட மாடலுக்கு சரி அல்ல.


Kasimani Baskaran
டிச 01, 2024 07:03

சூரிய தொலைக்காட்சி பார்த்தேன். சிறிதளவு மழை பெய்திருக்கிறது என்றுதான் சொல்கிறார்கள். வானிலை அறிக்கை ஒன்றுக்கும் உதவாது என்பது போல உருட்டினார்கள்.


நிக்கோல்தாம்சன்
டிச 01, 2024 13:19

அதையும் பார்க்கிறீர்கள் என்றால் நீங்க பெரிய ஆளுதான்


Kasimani Baskaran
டிச 01, 2024 21:52

சிங்கப்பூரில் அது ஒன்றுதான் கேபிளில் உண்டு.


முக்கிய வீடியோ