வியூக வகுப்பாளர்களால் ஒன்றும் செய்ய முடியாது
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சி தலைமை மீது தனக்கிருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்கு, பழனிசாமி நேரடியாக பதில் சொல்லவில்லை. தன்னுடைய குரலாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரைத்தான் ஒலிக்க வைத்திருக்கிறார். இந்த விஷயத்தில் என்ன நடந்தாலும், அதுகுறித்து தி.மு.க., தரப்பு கவலைப்படாது. காரணம், அடுத்த கட்சி விஷயத்தில் தலையிடுவது எங்கள் தலைவர் ஸ்டாலினுக்குப் பிடிக்காது. அதனால், அதுகுறித்து எதையும் நாங்கள் பேசப் போவதில்லை. த.வெ.க., தலைவர் விஜயுடன், வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் சந்தித்துப் பேசியுள்ளார். மக்களின் அன்பைப் பெற்றவர்கள்; மக்களோடு பயணிப்பவர்களுக்கு எதிராக, வியூக வகுப்பாளர்களால் என்ன செய்துவிட முடியும்? அந்த வியூகங்கள் என்ன பலனைக் கொடுத்துவிடும் என தெரியவில்லை. தி.மு.க.,வைப் பொறுத்தவரை, 200 தொகுதிகளில் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதனால், 2026ல் தி.மு.க., வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்.சேகர்பாபு, தமிழக அமைச்சர்