| ADDED : ஜன 25, 2025 02:56 PM
சிவகங்கை:பள்ளியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பொய்யாவயல் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவர் கணினி அறிவியல் வகுப்பு நடந்துகொண்டிருந்தபோது, கணினியை இணைக்க முயன்றபோது, மாணவர் மீது மின்சாரம் பாய்ந்தது.மாணவர் சிகிச்சைக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.மாணவரின் மரணம் தொடர்பான காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் தொடர்பாக ,மாணவரின் பெற்றோரிடம் உரிய தகவல்கள் தெரியப்படுத்தவில்லை என்று அ.ம.மு.க., பொதுசெயலாளர் தினகரன், பள்ளி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து உயிரிழந்த மாணவன் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.இந்நிலையில், தமிழக அரசு சார்பில் அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்ட அதிகாரிகள், பள்ளியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினர்.