வாசகர்கள் கருத்துகள் ( 1 )
This is one of the most important news but not covered it in right way. The tool kit name is “count on me”
சென்னை:கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களும், எளிதாக கணிதம் கற்கும் வகையில், சென்னை டிஸ்லெக்சியா சங்கம் சார்பில், புதிய கருவிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள, சென்னை டிஸ்லெக்சியா சங்கம், அவர்களின் கற்றலை மேம்படுத்த, பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது, கணிதத்தை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ள, 5 முதல் 10 வயதுள்ள குழந்தைகள், எளிதில் செயல்முறையின் வாயிலாக கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் கணக்குகளில் நான்கு இலக்கம் வரை எளிதாக விடை அளிக்கும் வகையில், இந்த கருவிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. சென்னை டிஸ்லெக்சியா சங்கத்தின் பொருளாளரும், சிறப்பு கல்வி ஆசிரியருமான ஸ்வேதா கிருஷ்ணா கூறியதாவது: கணிதத்தை மெதுவாக புரிந்து கொள்ளும் மாணவர்களுக்கு எளிதாக விளக்கும் வகையில், 18 வகையான அம்சங்களை உள்ளடக்கிய, 'கவுன்ட் இட் மீ' என்ற பெயரில் கருவிகளை வடிவமைத்துள்ளோம். இதன் வாயிலாக, பெரிது, சிறிது, நிறைய, குறைவு உள்ளிட்டவை குறித்து, பல்வேறு வண்ணங்களின் வாயிலாக, குழந்தைகளே தொட்டு, உணர்ந்து அறியும் வகையில் வடிவமைத்துள்ளோம். அதேபோல, இலக்கங் களுக்கும் தனித்தனி நிறங்கள், வடிவங்களை அமைத்துள்ளோம். அடிப்படையாக கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்குகளை, நான்கு இலக்கங்கள் வரை தீர்வு காணவும், அதன்பின், பின்னம், தசமங்களை தீர்க்கவும், இதில் வழிவகுத்து உள்ளோம். இது, சிறப்பாசிரியர்கள், பெற்றோர் பயன்படுத்தும் வகையில், செயல்முறை வீடியோக்களையும் பதிவேற்றி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
This is one of the most important news but not covered it in right way. The tool kit name is “count on me”