உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துபாய் விமானம் திடீர் ரத்து மதுரையில் பயணியர் அவதி

துபாய் விமானம் திடீர் ரத்து மதுரையில் பயணியர் அவதி

மதுரை:துபாயிலிருந்து மதுரை வர வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டதால் நேற்று மதுரையிலிருந்து துபாய் செல்ல வேண்டிய பயணியர் அவதிப்பட்டனர்.ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயிலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் காலை, 11:20 மணிக்கு மதுரைக்கு வந்து சேரும். மதுரையிலிருந்து மதியம், 12:20 மணிக்கு துபாய் புறப்பட்டு செல்லும்.நேற்று மதுரை வர வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டது என, நிர்வாகம் அறிவித்தது. இதனால் காலை, 8:00 மணி முதல் துபாய் செல்வதற்காக விமான நிலையம் வந்த பயணியரிடம் மதியம், 2:00 மணி, மீண்டும் மாலை, 5:40 மணி வரை தாமதம் என அறிவித்த நிலையில் இறுதியாக நேற்று இரவு, 8:40 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும் என, நிர்வாகம் அறிவித்தது.நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்திருந்த பயணியர் பெரும் அவதிக்குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை